
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. அந்த வகையில் பிப்ரவரி 22-ஆம் தேதியான நாளை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
அந்தவகையில் அகமதாபாத் நகரில் பிப்ரவரி 22-ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி மேலும் முன்னிலை பெறும் என்பதனால் இந்த போட்டிக்காக தற்போது இந்திய அணியின் வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இதன் காரணமாக தீவிர பயிற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பயிற்சியின்போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா பேட்டிங் பயிற்சி செய்கையில் அவர் அடித்த பந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது நிர்வாகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த தொடரின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ரா செயல்பட்டு வரும் வேளையில் அவர் விளையாடாமல் போகும் பட்சத்தில் அவருக்கு மாற்று வீரராக சிராஜ் இருந்து வருகிறார். இவ்வேளையில் அவர் இடது முழங்காலில் பலமாக காயமடைந்துள்ளதால் அவர் இனிவரும் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : தொடர்ந்து 3 டக் அவுட்டானதும் நல்லதுக்கு தான்.. அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த – ரவி சாஸ்திரி
மேலும் பந்து தாக்கியதும் வலியால் துடித்த முகமது சிராஜ் பாதியிலேயே பயிற்சியிலிருந்து வெளியேறியதால் அவரது காயம் எந்த அளவிற்கு இருக்கிறது? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நிர்வாகம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே அவர் இந்த தொடரில் நீடிப்பாரா? என்பதும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.