சும்மா மிரட்டாதீங்க.. அந்த நினைப்போட வந்தா ஒன்றரை நாளில் முடிச்சு விட்ருவோம்.. இங்கலாந்துக்கு சிராஜ் பதிலடி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது.

அதற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்யும் யுக்தியை பயன்படுத்தி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி வெல்வோம் என்று இங்கிலாந்து அணியினர் எச்சரித்து வருகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டு 3 – 0 என்ற கணக்கில் வென்றதைப் போல இம்முறை இந்தியாவில் வெல்வோம் என மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து வீரர்கள் சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.

- Advertisement -

முடிச்சு விட்ருவோம்:
இந்நிலையில் பஸ்பால் எனப்படும் அதிரடியான ஆட்டத்தை இந்திய மண்ணில் இங்கிலாந்து கடைப்பிடித்தால் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் 1 அல்லது 2 நாளில் முடிந்து விடும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவை வீழ்த்துவோம் என்று மிரட்டலை கொடுத்தால் நாங்களும் சிறப்பாக செயல்பட்டு ஒன்றரை நாளில் உங்களை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஒருவேளை இந்திய சூழ்நிலைகளில் இங்கிலாந்து பஸ்பால் ஆட்டத்தை விளையாடினால் போட்டி ஒன்று அல்லது ஒன்றரை அல்லது 2 நாட்களில் முடிந்து விடலாம். இங்கே உங்களால் ஒவ்வொரு நேரமும் எளிதாக அடிக்க முடியாது. ஏனெனில் சில நேரங்களில் இங்கே பந்து திரும்பலாம். சில நேரங்களில் பந்து நேராக செல்லலாம். எனவே இத்தொடரில் பஸ்பால் ஆட்டத்தை பார்ப்பது கடினம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அவர்கள் அப்படி விளையாடினால் எங்களுக்கு நல்லது. ஏனெனில் போட்டி மிகவும் விரைவாக முடியும். இந்த தொடரில் புதிய பந்தில் வீசக்கூடிய என்னுடைய லைன் மற்றும் லென்த் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும். வெள்ளைப்பந்து போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். நீங்கள் எப்போதும் 5 – 6 மீட்டர் தொலைவில் வீச வேண்டும்”

இதையும் படிங்க: நீங்க தூஸ்ராவுக்கு ரெடியா இருந்தா.. அஸ்வின் எக்ஸ்ட்ரா 2 பிளான் வெச்சுருப்பாரு.. இங்கிலாந்தை எச்சரித்த சாஸ்திரி

“ஏனெனில் புதிய பந்தில் நீங்கள் பிட்ச் அப் செய்தால் உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு ஸ்விங் கிடைக்காமல் போனால் லென்த்தில் சற்று மாற்றம் செய்ய வேண்டும். எனவே புதிய பந்தில் நான் ஒரே இடத்தில் தொடர்ந்து வீசுவதற்கு முயற்சிப்பேன். புதிய பந்தாக இருந்தாலும் பழைய பந்தாக இருந்தாலும் அது தான் இத்தொடரில் என்னுடைய கவனமாக இருக்கும்” என்று கூறினார்

Advertisement