ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அரையிறுதி போட்டி வரை தோல்வியையே சந்திக்காமல் வந்துள்ள இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மோசமான சாதனையை நிகழ்த்திய முகமது ஷமி :
அந்த வகையில் இன்று மார்ச் 9-ஆம் தேதி துபாயில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குதித்தது. அதனை தொடர்ந்து 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 9 ஓவர்கள் பந்துவீசி 74 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். அவரது இந்த பந்துவீச்சின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மோசமான ஒரு சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது 9 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 74 ரன்கள் வழங்கியுள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை வாரி வழங்கிய இரண்டாவது இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 75 ரன்கள் வழங்கியது மோசமான சாதனையில் முதலிடத்தில் இருந்தது. அவருக்கு அடுத்து தற்போது முகமது ஷமி 74 ரன்களை விட்டுக் கொடுத்து அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஓய்வை அறிவிக்கப்போகிறாரா ரவீந்திர ஜடேஜா? 10 முடிந்ததும் செய்த செயலால் ஏற்பட்ட சந்தேகம் – விவரம் இதோ
கடந்த 2023-ஆம் ஆண்டு உலககோப்பை தொடரின் போது காயமடைந்த ஷமி மீண்டும் இந்த தொடருக்கு தான் காம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய வேளையில் முகமது ஷமி தான் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.



