- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் ஓவரிலேயே 11 பந்துகளை வீசியதன் மூலம் 3 ஆவது இந்திய பவுலராக மோசமான சாதனையை நிகழ்த்திய – முகமது ஷமி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

மோசமான சாதனையை நிகழ்த்திய முகமது ஷமி :

அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியானது முதல் 10 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஒருநாள் போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் ஓவரை வீசிய முகமது ஷமி மொத்தம் 5 ஒயிடுகளுடன் சேர்த்து 11 பந்துகளை வீசி 6 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய மூன்றாவது இந்திய வீரராக அவர் இர்பான் பதான் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோருடன் அந்த மோசமான சாதனையில் இணைந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று கடந்த 2006-ஆம் ஆண்டு கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதான் 11 பந்துகளை ஒரு ஓவரில் வீசி இருந்தார். அந்த வகையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில் 5 ஒயிடுகளின் மூலம் 11 பந்துகளை வீசி முகமது ஷமி இந்த மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : துபாய் மைதானம் நாங்க நெனச்ச மாதிரி இல்ல.. அச்சத்தை தெரிவித்த சுப்மன் கில் – விவரம் இதோ

அதிலும் குறிப்பாக இந்த மூவருமே இந்த 11 பந்துகள் கொண்ட ஓவரை போட்டியின் முதல் ஓவராக வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியின் போது வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -