சயீத் முஸ்தாக் கோப்பையில் தேர்வான ஷமி.. அப்படின்னா ஆஸியில் எப்போது விளையாடுவார்? ரசிகர்கள் ஏமாற்றம்

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி சமீபத்தில் காயத்திலிருந்து குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து குணமடைந்து கடந்த நியூசிலாந்து தொடரிலேயே அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் சமீபத்தில் சந்தித்த லேசான காயத்தால் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த சூழ்நிலையில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ஷமி மொத்தமாக 7 விக்கெட்டுகள் எடுத்து பெங்கால் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார். அத்துடன் பேட்டிங்கில் அவர் அதிரடியாக 37 (36) ரன்கள் எடுத்து சிறப்பான கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

ஷமி கம்பேக்:

அதன் காரணமாக உடனடியாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடாமலேயே ஷமி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் 2024 சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடுவதற்காக ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதனால் அவர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட மாட்டாரா என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த ஷமி ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது ஃபிட்னஸை நிருபிக்க போதாது என்று பிசிசிஐ கருதுகிறது. எனவே சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சில போட்டிகள் விளையாடும் போது அவருடைய உடல் தகுதியை பிசிசிஐ மருத்துவக் குழுவினர் கவனிக்க உள்ளார்கள்.

- Advertisement -

இந்தியாவுக்காக ஷமி:

அவர்கள் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்று முழுமையான ஒப்புதல் கொடுத்த பின்பே ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. சயீத் முஸ்தாக் அலி கோப்பை வரும் நவம்பர் 23ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் ஷமி குறைந்தது 2 போட்டிகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நம்பர் 4 தான் துருப்புச்சீட்டு.. அந்த 2 பேரில் அதிக ரன்ஸ் அடிக்கும் அணியே வெல்லும்.. மைக்கேல் வாகன் பேட்டி

மறுபுறம் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. எனவே முதல் 2 போட்டிகளில் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடினால் அவர் மூன்றாவது போட்டியிலிருந்து இந்தியாவுக்காக விளையாட அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

Advertisement