இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியாவும் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்றது. இம்முறை சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம் கடந்த 2 தொடர்களில் தங்களுக்கு வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை எப்படியாவது வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. சொல்லப்போனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய அணியினர் சவால் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கும் நம்பர் 4வது இடத்தில் விளையாடும் கோலி – ஸ்மித் துருப்புச்சீட்டு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
முக்கியமான நம்பர் :
அந்த இருவரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்கள் இடம் பெற்றிருக்கும் அணியே கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வாகன் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் நான்காவது இடத்தில் விளையாடியதை சமீபத்திய ஒருநாள் தொடரில் பார்த்தோம். அந்த இடத்தில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்திற்கு வந்துள்ளதையும் கவனிக்க முடிகிறது”
“அந்த இடத்தில் மீண்டும் அவர் பொறுமையுடன் ரிலாக்ஸாக விளையாடுகிறார். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கால் வைத்ததும் நாம் வெற்றிகரமாக செயல்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்துள்ளோம் என்பதை நன்றாக அறிவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நம்பர் 4 பேட்ஸ்மேன்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து மொத்த தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாம்”
அசத்தப்போவது யார்:
“15 – 20 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வரும் போது வெற்றி பெறுவதற்கு முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவிப்பதை பற்றி யோசிப்பீர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீபத்திய தொடர்களில் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக விளையாடி சுமாராக செயல்பட்டார். அதனால் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் தம்முடைய பழைய நான்காவது இடத்தில் அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஸ்வின் மாதிரி இந்திய வீரர்களை கழற்றி விட்டதை கங்குலி எதிர்த்தாரு.. பாண்டிங் வெளியேறியது பற்றி கைப்
அதே போல விராட் கோலி சமீபத்திய நியூசிலாந்து தொடரில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி சுமாராக விளையாடினார். எனவே அவரும் ஆஸ்திரேலியாவில் நான்காவது இடத்தில் களமிறங்க உள்ளார். அதனால் அந்த இரண்டு உலகத் தரமான பேட்ஸ்மேன்களில் யார் பெரிய ரன்கள் குவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.



