என்னது இது? இதுபோன்ற பொய்யான விடயங்களை பரப்ப வேண்டாம் – முகமது ஷமி வேண்டுகோள்

Shami-Marriage
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேளையில் கடந்த பல மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடர்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறவில்லை.

தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அவர் பந்துவீச்சு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் சமூக வலைத்தளம் மூலம் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சானியா மிர்ஸா உடனான திருமணம் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆதாரமற்ற விஷயங்களை பரப்பக்கூடாது.

இந்த செய்தி மிகவும் விஷத்தனமானது. யாரோ வேண்டுமென்றே இது போன்ற செய்திகளை பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை பரப்பினால் நான் என்ன செய்வது. என்னுடைய மொபைல் போனை ஆன் பண்ணாலே சானியா மிர்சாவுடன் திருமணம் என்று தான் பலரும் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

- Advertisement -

மீம்ஸ் போடுவது என்பது மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவர் வாழ்க்கையை அது கிடைக்கும் என்றால் நிச்சயம் அதை பற்றி யோசிங்கள். கண்ட கண்ட விஷயங்களை சமூக வளையத்தில் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் வேணாம்ன்னு சொல்லிடுவாரு.. ஆனா விராட் கோலி எனக்கே சவால் விடுவாரு.. ஷமி ஓப்பன்டாக்

மேலும் அதிகாரபூர்வ மற்ற பக்கங்களில் இது போன்ற செய்திகள் பரப்பப்படுகிறது. அது போன்ற நபர்கள் இந்த செய்தியை போட்டுவிட்டு அதிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். அப்படி செய்தால் நான் நிச்சயம் உங்களுக்கு பதில் அளிப்பேன் என் முகமது ஷமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement