ரோஹித் வேணாம்ன்னு சொல்லிடுவாரு.. ஆனா விராட் கோலி எனக்கே சவால் விடுவாரு.. ஷமி ஓப்பன்டாக்

Mohammed Shami 3
- Advertisement -

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நாயகர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் (264), ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் போன்ற உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

அந்தளவுக்கு அதிரடியாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் வெற்றிகளில் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடிய அவர் கேப்டனாக இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மறுபுறம் நங்கூரமாக நின்று கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி 26,000+ ரன்களும் 80 சதங்களும் அடித்துள்ளார்.

- Advertisement -

ஷமிக்கு சவால்:
மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ள அவர் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் அப்படி மகத்தான பேட்ஸ்மேன்களாக கருதப்படும் விராட் மற்றும் ரோஹித்துக்கு வலைப்பயிற்சியில் சவாலை கொடுக்கும் பவுலர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் வலைப்பயிற்சியில் கூட ரோஹித் சர்மா தம்முடைய பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டார் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி வலைப் பயிற்சியிலேயே தமக்கு சவாலை கொடுப்பார் என்றும் ஷமி கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியும் நானும் எப்போதும் சவால் விட்டுக் கொள்வோம். அவர் எனக்கு எதிராக நல்ல ஷாட்டுகளை அடிக்க விரும்புவார் நான் அவரை அவுட்டாக்க விரும்புவேன். அது எங்களுக்கிடையே உள்ள நட்பை பிரதிபலிக்கும். அது உங்களுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவதற்கும் உதவும்”

இதையும் படிங்க: புரிஞ்சுக்கவே முடியல.. அந்த இந்திய 3 வீரர்களை ஏன் கழற்றி விட்டீங்க? கம்பீருக்கு ஹர்பஜன் மறைமுக கேள்வி

“எடுத்துக்காட்டாக 2 ஸ்லிப் மற்றும் 2 கல்லி ஃபீல்டர்களை வைத்துக் கொண்டே விராட் கோலி எனக்கு எதிராக ரன்கள் அடிக்க முயற்சிப்பார். அந்த வகையில் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வோம். ஆனால் ரோஹித் சர்மா என்னை எதிர்கொள்ள விரும்ப மாட்டார். வலைப்பயிற்சியில் அவர் என்னுடைய பந்துகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விடுவார்” என்று கூறினார்.

Advertisement