பால் ஸ்விங் ஆகலனா என்ன? நான் இந்த வேர்லடுகப்ல விக்கெட்டை அள்ளி வீச இதுவே காரணம் – முகமது ஷமி வெளிப்படை

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரும் பங்கினை அளிக்கிறார் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு தற்போது உச்சகட்ட பார்முடன் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளில் விளையாடாத முகமது ஷமி பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ஆரம்பித்து கடைசியாக நடைபெற்று முடிந்த அரையிறுதி போட்டி வரை இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக மூன்று போட்டிகளில் 5 விக்கெட் (மற்றும் அதற்கும் மேல்) சாய்த்த அவர் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

மேலும் ஓவருக்கு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து கச்சிதமாகவும், சிக்கனமாக பந்துவீசி வரும் முகமது ஷமி கடைசியாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அசத்தியிருந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த அரையிறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்தார். இந்த உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் ஹார்டிக் பாண்டியாவே தொடர்ந்து அணியில் இடம்பெற்று இருந்ததால் ஷமிக்கு பெரிதளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

பின்னர் ஹார்டிக் பாண்டியா அணியிலிருந்து காயத்தால் வெளியேறிய பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று விளையாடி வருகிறார். எதிர்வரும் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படும் முகமது ஷமி இந்த தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சு என்ன காரணம்? என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க :

நான் எப்போதுமே போட்டியின் சூழல் எவ்வாறு இருக்கிறது? மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? பந்து ஸ்விங் ஆகிறதா? இல்லையா? என்பதை எல்லாம் கணித்து தான் பந்துவீசுவேன். ஒருவேளை குறிப்பிட்ட மைதானத்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்து வீசுவேன். அவ்வாறு பந்துவீசும் போது பேட்ஸ்மேன்கள் தவறுசெய்ய நேரிடும். அப்படி பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும் போது எனக்கு விக்கெட்டும் கிடைக்கும் என்று தனது சக்ஸஸ் சீக்ரெட் குறித்து முகமது ஷமி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement