IND vs NZ : என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் இதுதான். வேற எதுவுமில்ல – ஆட்டநாயகன் ஷமி பேட்டி

Mohammed-shami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் முக்கியமான இரண்டாவது போட்டியானது நேற்று ஜனவரி 21-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது.

IND-vs-NZ

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கை கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பந்துவீசிய இந்திய அணியானது முதல் ஓவரிலிருந்து அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றி வந்தது.

இறுதியில் 34.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 108 ரன்களில் சுருட்டியது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 20.1 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohammed Shami

இந்த போட்டியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது ஷமி கூறுகையில் : நான் எப்பொழுதெல்லாம் பந்து வீசுகிறேனோ அப்போதெல்லாம் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் மட்டும்தான் அதிக ஃபோகஸ் செய்கிறேன். சில சமயம் லென்த்தை நீங்கள் தவற விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயத்தில் உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்காது.

இதையும் படிங்க : IND vs NZ : எல்லாமே அவங்களுக்கு சாதகமா போச்சி. நாங்க என்ன பண்றது? – தோல்வி குறித்து டாம் லேதம் வருத்தம்

ஆனால் நமது ரிதம் சரியாக இல்லை என்றாலும் ஒரு சில நாட்களில் விக்கெட்டுகள் கிடைக்கும். அந்த வகையில் இந்த போட்டிக்காக நான் நிறைய பயிற்சி செய்தேன். அனைத்தும் சரியாக அமைந்ததால் விக்கெட்டுகளும் கிடைத்தது வெற்றியும் கிடைத்தது. இந்த மைதானத்தில் நல்ல சீம் இருந்ததால் ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் இந்த மைதானத்தை மிகவும் விரும்பி பந்து வீசினேன் என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement