- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க ஓய்வை அறிவிச்சா நானும் சொல்லனுமா? தனது ஓய்வு குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட – முகமது ஷமி

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியானது இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அந்த தொடரில் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்திருந்தனர்.

மேலும் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் தாங்கள் ஓய்வு பெற விரும்புவதாகவும் மூவரும் விளக்கம் கொடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து மேலும் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருந்ததாக பேசப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் கூடிய சீக்கிரத்தில் 35 வயதை எட்டி விடுவார் என்பதனால் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற ஒரு பேச்சு எழுந்து வந்தது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 உலகக் கோப்பை தொடரின்போது காயம் அடைந்த முகமது ஷமி அதன் பிறகு இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேளையில் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் பழையபடி பந்துவீச்சுக்கு தயாராகும் படி பயிற்சியை மேற்கொண்டு வரும் முகமது ஷமி தற்போது தனது ஓய்வு குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கிரிக்கெட் எப்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் சலிப்பை ஏற்படுகிறதோ அப்போதுதான் நான் ஓய்வு பெற்று வெளியேறுவேன்.

இதையும் படிங்க : அறுவைசிகிச்சை செய்ததுக்கு அப்புறம் இப்போ வரைக்கும் அந்த 2 வீரர்கள் தான் எனக்கு போன் பண்ணி கேர் பன்றாங்க – முகமது ஷமி

இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மீண்டும் களம் புகுவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன். டெஸ்ட், ஒருநாள் மட்டும் இல்லாமல் நிச்சயம் டி20 கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவேன். தற்போது எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அறவே கிடையாது என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -