IND vs AFG : 32 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரில் சாதனை படைத்த இந்தியர் – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Shami-1
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Shami

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த முகமது சமி சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக 50 ஆவது ஓவரை வீசிய முகமது சமி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் ஹாட்ரிக் எடுப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 1987 ஆம் ஆண்டு சேத்தன் சர்மா உலக கோப்பையில் ஹாட்ரிக் எடுத்துள்ளார் அதற்கு அடுத்து 32 ஆண்டுகள் கழித்து முகமது ஷமி தற்போது எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement