முடிவுக்கு வரும் முகமது ஷமியின் கிரிக்கெட் கரியர்.. மீண்டும் ஒருமுறை கிடைத்த ஏமாற்றம் – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடைசியாக 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த அடுத்த தொடர்களை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இடம் பெற்றாலும் காயம் காரணமாக அந்த தொடரில் இருந்தும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

முடிவுக்கு வரும் முகமது ஷமியின் கரியர் :

பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்த அவர் அடிக்கடி காயமடைந்து வருவதால் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது சிக்கலாகி வந்தது. இருந்தாலும் தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்ட முகமது ஷமி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததோடு அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடியிருந்தார்.

- Advertisement -

அந்தவகையில் பெங்கால் அணிக்காக மூன்று ஆட்டங்களில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அதிலும் குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டையும் எடுத்து தனது திறனை நிரூபித்திருந்தார். இதன் காரணமாக விரைவில் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணியின் நிர்வாகம் முகமது ஷமியை விட்டு நகர்ந்துவிட்டது என்று பேசப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் முகமது ஷமியின் கிரிக்கெட் கரியரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு ஏமாற்றமான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட போது அந்த இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காவில்லை.

இதையும் படிங்க : மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்.. அதுவும் அதே பவரோட கெத்தோடு ரிட்டர்ன் – வெளியான அறிவிப்பு

ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்ற வேளையில் மீண்டும் ஒருமுறை முகமது ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுக்குழு முகமது ஷமியை விட்டு முற்றிலும் நகர்ந்துவிட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் முகமது ஷமியின் கிரிக்கெட் கரியர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement