இந்தியாவின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா கிடையாது.. இவ்ளோ செஞ்சும் நம்பிக்கை வரல.. ஷமி வித்யாச கருத்து

Mohammed Shami 7
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர். இருப்பினும் 8 போட்டிகளில் 15 விக்கெட்களை 4.17 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் அழுத்தமான நேரத்தில் தேவைப்படும் போதெல்லாம் அவர் தான் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் தோல்வியை சந்திப்போம் என்று நினைத்ததாக விராட் கோலி சமீபத்தில் கூறியிருந்தார்.

- Advertisement -

நம்பர் ஒன் பவுலர்:
ஆனால் 16, 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக விராட் கோலி பாராட்டியிருந்தார். எனவே 8வது அதிசயமான பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டியிருந்தார். அத்துடன் வாசிம் அக்ரம், பிரட் லீ போன்ற ஜாம்பவான்களும் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தற்போது உலகின் நம்பர் ஒன் பவுலராக இருப்பதாக பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் சமயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பவுலர் யார் என்று சமீபத்திய பேட்டியில் முகமது ஷமியிடம் செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த வித்தியாசமான பதில் பின்வருமாறு. “தற்சமயத்தில் நான் தான் இந்தியாவின் சிறந்த பவுலர் என்று நினைக்கிறேன். நான், பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் கூட்டணியாக இந்திய அணிக்கு விளையாடினோம்”

- Advertisement -

“5 – 6 பேரைக் கொண்ட எங்கள் கூட்டணியை விட உலகில் வேறு எந்த பவுலர்களும் மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்க மாட்டார்கள். பொதுவாக நான் நம்பர் ஒன் அல்லது நம்பர் 2 போன்றவற்றை நம்ப மாட்டேன். நாங்கள் 5 – 6 பேருமே சிறந்த பவுலர்கள். 2019 உலகக் கோப்பையில் முதல் 4 – 5 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன் பின் களமிறங்கிய போட்டியில் ஹாட்ரிக் எடுத்த நான் அடுத்த போட்டியில் 5 விக்கெட்டுகளும் அதற்கடுத்த போட்டியில் 4 விக்கெட்டுகளும் எடுத்தேன்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் ஓய்வு பெற்றதா நினைக்காதீங்க.. இந்திய அணியில் இதை அழிக்கவே முடியாது.. அர்ஷ்தீப் பேட்டி

“அதே போல 2023 உலகக் கோப்பையிலும் ஆரம்பத்தில் விளையாடாத நான் அதன் பின் 5, 4, 5, 7 விக்கெட்டுகளை எடுத்தேன். ஆனால் இவ்வளவு விக்கெட்டுகள் எடுத்தும் எனக்கு நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு வீரரிடம் இன்னும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஏனெனில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் தான் என்னை நிரூபித்துக் காட்ட முடியும்” என்று கூறினார்.

Advertisement