எல்லார் முன்னாடியும் பாண்டியா திட்டுனாரு.. இவ்ளோ செஞ்சும் எந்த ஐபிஎல் அணிக்கும் நம்பிக்கை வரல.. ஷமி ஆதங்கம்

Mohammed Shami 4
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா செமி ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதை விட 2023 உலகக் கோப்பையில் அனலாக பந்து வீசிய அவர் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 7 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் செல்ல உதவினார்.

அதன் வாயிலாக உலகக்கோப்பை செமி ஃபைனலில் 7 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராகவும் ஷமி உலக சாதனை படைத்தார். இருப்பினும் அந்த தொடரில் காயத்துடன் விளையாடிய அவர் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வருகிறார். முன்னதாக இந்திய அணியை போலவே ஐபிஎல் தொடரிலும் முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஷமி ஆதங்கம்:
குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகள் எடுத்த அவர் பாண்டியா தலைமையில் குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆனால் 2022 ஐபிஎல் சீசனின் ஒரு போட்டியில் பாண்டியா வீசிய பந்தை எதிரணி பேட்ஸ்மேன் தேர்ட் மேன் திசையில் பவுண்டரி அடித்தார். அதை அங்கே இருந்த முகமது ஷமி சுமாராக ஃபீல்டிங் செய்து தடுக்கத் தவறினார்.

அதனால் கோபமடைந்த பாண்டியா சீனியர் என்றும் பார்க்காமல் நேரலையில் ஷமியை கடுமையாக திட்டினார். இந்நிலையில் அந்த தருணம் பற்றி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள முகமது ஷமி ஐபிஎல் தொடரில் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை எடுத்தும் எந்த அணியும் தம்மை நிலையாக தக்க வைப்பதில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக அது போன்ற விஷயங்களுக்கு பதில் கொடுப்பதில்லை”

- Advertisement -

“ஆனால் விஷயங்கள் மோசமாக செல்லும் போது நான் பேச வேண்டும். பாண்டியாவும் நானும் நல்ல தொடர்பை கொண்ட நண்பர்கள். சுமார் 10 வருடங்கள் ஒருவரை ஒருவர் அறிவோம். ஆனால் அந்த சமயத்தில் பாண்டியா அப்படி நடந்து கொண்டதாக உணரவில்லை. குறிப்பாக “உங்களைப் பற்றி நான் என்ன சொன்னேன் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை” என்று பாண்டியா சொன்னார்”

“பொதுவாக கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதால் நாம் நம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். டெல்லி அணி எனக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர் பஞ்சாப்புக்காக விளையாடிய நான் 3 வருடங்களில் 60 விக்கெட்டுகள் எடுத்தேன். அதன் பின் குஜராத்துக்காக 2 வருடங்களில் 48 விக்கெட்டுகள் எடுத்தேன்”

இதையும் படிங்க: என்னது இது? இதுபோன்ற பொய்யான விடயங்களை பரப்ப வேண்டாம் – முகமது ஷமி வேண்டுகோள்

“ஒருவேளை இந்த வருடம் அவர்கள் என்னை தக்க வைக்காமல் போனால் என்ன வித்தியாசம் ஏற்படும்? என்னை வாங்கும் எந்த அணிக்காகவும் நான் நன்றாக விளையாட முயற்சிப்பேன். எனவே நன்றாக செயல்படுபவரை விரும்பினால் என்னை தக்க வையுங்கள். ஒருவேளை வேறு பவுலர்களை விரும்பினால் அவர்களை கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.

Advertisement