இப்போதான் குணமாகிட்டு வந்தாரு.. இப்போ இதுவேறயா? மீண்டும் பாதிப்பை சந்தித்த முகமது ஷமி – வெளியான தகவல்

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது கணுக்கால் பகுதியில் அடைந்த காயம் காரணமாக அந்த தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்திய அணி விளையாடிய எந்த தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடவில்லை. அதனை தொடர்ந்து இங்கிலாந்து சென்று கணுக்கால் காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் :

அதன்பின்னர் கடந்த பல மாதங்களாகவே ஓய்வில் இருந்து வந்த அவர் கடந்த சில மாதங்களாக தான் மெல்ல மெல்ல பயிற்சியை ஆரம்பித்தார். அதன்காரணமாக அவர் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் முகமது ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த காயம் குணமடைய அவருக்கு 6 வாரம் முதல் 8 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது காயத்தின் தன்மை குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது கம்பேக் குறித்து பேசியிருந்த முகமது ஷமி கூறுகையில் : என்னுடைய உடற்பகுதி முழுமையாக விளையாடும் அளவிற்கு ஃபிட்டாக இருந்தால் மட்டுமே தான் இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவேன். ஏனெனில் நான் மீண்டும் அணிக்குள் அவசரப்பட்டு வந்து காயம் ஏற்பட்டால் அது எனக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய டிம் சவுதி – புதிய கேப்டன் யார்?

எனவே எப்பொழுது என்னுடைய உடற்தகுதி 100% பூர்த்தி அடைகிறதோ அதன்பின்னர் தான் நான் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பேன் என்று முகமது ஷமி பேசியிருந்தார். இவ்வேளையில் மீண்டும் அவருக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement