எதிர்வரும் அந்த தொடரில் அசத்தினால் முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம் – வெளியான தகவல்

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது கணுக்கால் காயத்துடன் விளையாடிய அவருக்கு உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்படி செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு இதுவரை அவரால் அந்த காலத்தில் இருந்து மீண்டும் முழுவதுமாக திரும்பி வர முடியவில்லை.

முகமது ஷமிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு :

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது முகமது ஷமி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருந்தாலும் மறுபடியும் அதே இடத்தில் காயத்தை சந்தித்து இந்திய அணியில் இருந்து வெளியேறினார். பின்னர் எத்தனையோ முறை மீண்டும் அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் தொடர்ச்சியாக அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் தேர்வுக்குழுவும் அவரது காயம் மற்றும் பிட்னஸை கருத்தில் கொண்டு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்நிலையில் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமெனில் எதிர்வரும் துலீப் டிராபி தொடரில் அசத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அடுத்ததாக இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் அடுத்த மாதம் விளையாட இருக்கும் வேளையில் இம்மாதம் துலீப் டிராபி தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான ஈஸ்ட் ஜோன் அணியில் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். ஒருவேளை இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார்.

- Advertisement -

எனவே முகமது ஷமி இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது 34 வயதை எட்டியுள்ள முகமது ஷமி இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார் என்பதனால் அவர் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : 2027 உலகக் கோப்பையை மறந்துடுங்க.. அதான் கடைசி தொடர்.. விராட், ரோஹித்தை கழற்றி விடும் பிசிசிஐ?

அவரது உடற்தகுதி குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்கால் கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் : தற்போது முகமது ஷமி நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும் அவரால் தொடர்ந்து பந்துவீச முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்க முழு முயற்சியுடன் தயாராகி வருகிறார் என்றும் கூறியுள்ளது.

Advertisement