2027 உலகக் கோப்பையை மறந்துடுங்க.. அதான் கடைசி தொடர்.. விராட், ரோஹித்தை கழற்றி விடும் பிசிசிஐ?

Rohit Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருகிறார்கள். தங்களுடைய கேரியரில் நிறைய ரன்கள் மற்றும் சதங்களை அடித்துள்ள அவர்கள் இந்தியாவின் ஏராளமான வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். குறிப்பாக ரோஹித் சர்மா 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவினார்.

2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை அவர் கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்தார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை இந்தியா வெல்ல உதவிய விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பட்டங்களையும் வெல்ல உதவினார். இருப்பினும் தற்போது அவர்கள் இருவருமே 36 வயதை கடந்து விட்டனர்.

- Advertisement -

2027 உ.கோ மறந்துடுங்க:

அதனால் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர். அதனால் 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு முன்பாகவே விராட் ரோஹித்தை கழற்றி விட இந்திய அணி மற்றும் தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக டெய்லி ஜக்ரான் இணையத்தில் செய்து வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் இளம் அணியை உருவாக்க விரும்புகிறார்கள். 2027ஆம் ஆண்டு விராட் 39, ரோஹித் 40 வயதை தொட்டிருப்பார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடைசி:

அந்த வயதில் அவர்களால் நல்ல உடல் தகுதியுடன் நல்ல ஃபார்மில் இந்தியாவுக்காக விளையாட முடியுமா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. எனவே இப்போதிலிருந்தே இளம் அணியை உருவாக்கினால் தான் 2027 உலகக் கோப்பையில் வெற்றி காண முடியும் என்று தேர்வுக் குழுவினர் நம்புகின்றனர். அதற்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: சவால்விட்ட பென் டக்கெட் தோளில் கைப்போட்டு சொன்னது என்ன? ரகசியத்தை பகிர்ந்த ஆகாஷ் தீப் பேட்டி

ஒருவேளை அவர்கள் 2027 வரை அவர்கள் விளையாட வேண்டுமெனில் அதற்கு விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடுவது அவசியம் என்றும் தேர்வுக்குழுவினர் கருதுகின்றார்கள். அதில் அவர்கள் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பதும் அவசியமாகிறது. மொத்தத்தில் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறையத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement