இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் இருந்து அவர் நிராகரிக்கப்பட்டு வருவது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்திய முகமது ஷமி :
ஆனாலும் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரின் ஒரு போட்டியில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக பெங்கால் அணி மிகச் சிறப்பான வெற்றியையும் பதிவு செய்தது.
முகமது ஷமியின் உடற்தகுதியை காரணம் காட்டி தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் அவரை நிராகரித்து வரும் வேளையில் தற்போது முழு உடற்தகுதியுடன் விளையாடி வரும் முகமது ஷமி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக மீண்டும் அவர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் வெளிப்படுத்தி உள்ளதால் விரைவில் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் முக்கிய வீரராக விளையாடி வந்த அவர் தற்போது உடற்தகுதி மற்றும் வயதை காரணம் காட்டி இந்திய அணி நிராகரித்து வரும் வேளையில் தொடர்ச்சியாக அவர் இந்திய அணிக்கு திரும்பும் வகையில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 3வது ஒன்டே நடைபெறும் வைசாக் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



