3வது ஒன்டே நடைபெறும் வைசாக் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Vizag Stadium
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் போராடி வென்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டியில் வென்று டெஸ்ட் தொடரில் தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது.

மறுபுறம் கடைசிப் போட்டியில் வென்று டெஸ்ட் தொடரைப் போலவே ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிக்க தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2003ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 25000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள அம்மைதானத்தில் 2005 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

விசாகபட்டினம் மைதானம்:

அதில் இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2018இல் இங்கு நடைபெற்ற இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி வெற்றி தோல்வின்றி சமனில் முடிந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா முதல் முறையாக இப்போது தான் விளையாட உள்ளது.

வெதர் ரிப்போர்ட்:

டிசம்பர் ஆறாம் தேதி விசாகப்பட்டினத்தில் மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

விசாகப்பட்டின மைதானத்தில் இருக்கும் பிட்ச் வரலாற்றில் பேட்டிங் செய்வதற்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. இங்குள்ள பிட்ச்சில் நல்ல வேகம், பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் பந்து பேட்டுக்கு நன்றாக வரும் என்று நம்பலாம். அதைப் பயன்படுத்தி நிதானத்துடன் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புள்ளது.

புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஆர்டர்களில் ஸ்பின்னர்கள் வழக்கமான ஆதிக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 277. இங்கு வரலாற்றில் 5 முறை 250 – 299, 3 முறை 300+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 50 சதமடிச்சும் விராட் கோலி ஏன் வெறித்தனமா கொண்டாடுறாரு தெரியுமா? அணிக்குள் போராடுவது பற்றி அஸ்வின்

வரலாற்றில் இங்கே நடைபெற்ற 10 போட்டிகளில் 6 முறை சேசிங் செய்த அணிகளும் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. அது மட்டுமின்றி இரவு நேரத்தில் பனியின் தாக்கத்தால் பந்து வீசுவது கடினமாகும். எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு விட்டிடலாம்.

Advertisement