ரஞ்சி டிராபி போட்டியில் தரமான கம்பேக் கொடுத்த முகமது ஷ்மி – இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியோடு காயம் காரணமாக இந்திய அணிக்காக மீண்டும் விளையாடாமல் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை பெற்று வந்த அவர் மெல்ல மெல்ல வலைப்பயிற்யில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஞ்சி போட்டியில் அசத்திய முகமது ஷமி :

ஆனால் தான் முழு உடற்பகுதி அடையும் வரை அவசரப்பட்டு இந்திய அணிக்கு இணைய மாட்டேன் என்றும் அப்படி அவசரப்பட்டு வந்து காயமடைந்தால் அது தனக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி அந்த தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகி இருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்பில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வரும் முகமது ஷமி மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார். அந்த வகையில் ரஞ்சி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பத்து ஓவர்கள் வீசிய அவர் கால் வலியுடன் விக்கெட் எதுவும் எடுக்காமல் இருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 9 ஓவர்கள் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மொத்தமாக இந்த போட்டியில் 19 ஓவர்கள் வீசிய அவர் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதனால் ஆஸதிரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கம்பேக்ன்னா இப்படி இருக்கனும்.. அஸ்வின் சாதனையை உடைத்த சக்ரவர்த்தி.. புதிய சாதனை

ஏனெனில் முகமது ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருந்தால் அது இந்திய அணிக்கு தான் நல்லது என்பதனால் அவரை ஆஸதிரேலிய தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை தவிர்த்து எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement