இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஷமி கம்பேக் கொடுக்கும் தேதி அறிவிப்பு.. ஆஸியில் விளையாடுவாரா?

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அந்த வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்ட அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினர். அதன் பின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் முழுமையாக குணமடையாததால் அந்த தொடர்களில் விளையாடாத அவர் குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் புதிதாக ஷமி காயத்தை சந்தித்ததாக கேப்டன் ரோஹித் சர்மாவே கூறியிருந்தார். அதனால் ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

- Advertisement -

ஷமி கம்பேக்:

அப்படி இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனதால் ரசிகர்களிடம் ஷமி மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷமி முழுமையாக குணமடைந்துள்ளதால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளதாக அவருடைய மாநில வாரியமான பெங்கால் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் புதன்கிழமை தங்கள் அணி தங்களுடைய அடுத்த போட்டியில் மத்திய பிரதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்தூரில் நடைபெறும் அந்தப் போட்டியில் ஷமி மீண்டும் விளையாட உள்ளதாக பெங்கால் வாரியம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஷமி தன்னுடைய உடல் தகுதியை பிசிசிஐ நிரூபிக்க உள்ளார். அந்தப் போட்டியில் மட்டும் எதிர்பார்த்தது போல் நன்றாக பந்து வீசி விட்டால் ஷமி ஃபிட்டாக இருக்கிறார் என்பது நிரூபணமாகி விடும்.

- Advertisement -

இந்தியாவுக்கு வாய்ப்பு:

அதைத் தொடர்ந்து உடனடியாக பிசிசிஐ அவரை இந்திய அணியில் தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலியாவுக்கு விளையாடுவதற்காக அனுப்பும். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அதற்குள் ஷமி தம்முடைய ஃபிட்னஸை நிரூபித்து விட்டால் முதல் போட்டியிலேயே விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் கூட இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இந்தியாவுக்காக விளையாட பிரகாச வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: திரும்ப திரும்ப தவறு செய்றீங்க.. இந்திய அணியை எச்சரித்த சுனில் கவாஸ்கர் – என்ன காரணம்?

இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட முக்கியமான தொடரில் ஷமி போன்ற அனுபவம் மிகுந்த வீரர் விளையாடுவது இந்தியாவுக்கு பலத்தை சேர்த்து வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement