இந்திய அணியின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 206 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 120 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்ப வர என்ன செய்ய வேண்டும்? :
இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடருக்கு பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்திய அணிக்கு அவ்வப்போது வந்து போகும் அவர் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். அதன்பின்னர் மீண்டும் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் தனது உடற்தகுதியையும் நிரூபித்து விட்டார்.
பின்னர் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடரிலும் பெங்கால் அணிக்காக விளையாடி அசத்தலான பங்களிப்பை வழங்கியிருந்தார். ஆனாலும் அவரை இந்திய அணியின் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்பி வர என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சில தகவல்களை இங்கு காணலாம்.
அந்தவகையில் தற்போது 35 வயதாகும் அவர் இளம் வீரர்களை தாண்டி மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பினை பெறவேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். அவர் விக்கெட் வீழ்த்துவதோடு சேர்த்து முழுநாள் களத்தில் நின்று விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.
இதையும் படிங்க : இதை நிரூபித்த அப்றமும் ரோஹித்தை அவமானப்படுத்தியதே கம்பீர் தான்.. பழி அகர்கர் மேல விழுது.. திவாரி
அப்படி அவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி அசத்துவதோடு சேர்த்து எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் நிச்சயம் மீண்டும் இந்திய அணிக்கு அவர் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



