இதை நிரூபித்த அப்றமும் ரோஹித்தை அவமானப்படுத்தியதே கம்பீர் தான்.. பழி அகர்கர் மேல விழுது.. திவாரி

Manoj Tiway
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. அந்தத் தொடர் தோல்விகளை 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் தலைமையில் வென்று இந்திய அணி உடைத்தது. இருப்பினும் தற்போது ரோஹித்தை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு 2027 உலகக் கோப்பைக்கு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.

அத்துடன் வயதைக் காரணமாக வைத்து ரோஹித்தை கழற்றி விடவும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற ரோஹித்தை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு காரணமானதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். அதற்கான பழி அகர்கர் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவமானப்படுத்திய கம்பீர்:

இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு. “அஜித் அகர்கர் பற்றி எனக்குத் தெரியும். முடிவுகளை திறம்படவை எடுக்கக்கூடிய அவர் இப்படிப்பட்ட முடிவுக்கு ஆதரவளிக்க மாட்டார். இந்த முடிவை எடுக்க அவருக்குப் பின்னால் யாரோ இருந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. திரைக்கு முன் அந்த முடிவை தேர்வுக்குழு தலைவர் எடுத்தது போல் தெரியலாம். ஆனால் இயற்கையாக அதற்கு பயிற்சியாளரின் உள்ளீடு இருக்கும்”

“தனிப்பட்ட முறையில் நீங்கள் முடிவுகளை எடுக்க முடியாது. எடுக்கப்பட்ட முடிவுக்கு அவர்கள் இருவருமே சமமாக பொறுப்புடையவர்கள். அது மட்டுமின்றி இப்போதெல்லாம் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதிலும் நிலையற்றத் தன்மை காணப்படுகிறது. அதனால் எனக்கு ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதற்கான ஆர்வமே போய்விட்டது”

- Advertisement -

திவாரி விளாசல்:

“2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஒருவரை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்கிய நீங்கள் புதியவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். அது தேவையற்றது என்று நான் கருதுகிறேன். ரோஹித்துடன் நானும் விளையாடியுள்ளேன். உலகம் முழுவதிலும் நிறைய அன்பைப் பெறும் அவரை நீங்கள் அவமதித்துள்ளதாக நான் கருதுகிறேன்”

“அன்றிலிருந்தே நான் ஆர்வத்தை இழந்து விட்டேன். அணிக்குள் தெளிவு இல்லாததால் நிறைய சர்ச்சைகள் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. 2 ஐசிசி கோப்பைகளை வென்ற ரோஹித் நிரூபிக்கப்பட்ட கேப்டன். 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட்டுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமைந்தது. அதனால் அந்த கோப்பையையும் ரோஹித் நூலிலையில் தவற விட்டார்”

இதையும் படிங்க: தரமான அர்ஷ்தீப்பை என்னை மாதிரி கழற்றி விடாம.. விளையாட வைங்க பாஸ்.. கம்பீரை விளாசிய அஸ்வின்

“இல்லையேல் ரோஹித் 3 ஐசிசி கோப்பைகளை வென்றிருப்பார். அப்படிப்பட்ட அவரை 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்று ஏன் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்? அவர் 3 இரட்டை சதங்கள் அடித்த போது யாரும் கேள்வி எழுப்பவில்லை. 2023இல் கருத்தை உருவாக்க விரும்பிய அவர் சுயநலமின்றி விளையாடினார். ஆனாலும் அவருடைய திறமையை சந்தேகிக்கும் நீங்கள் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்கியது மிகப்பெரிய தவறு” என்று கூறினார்.

Advertisement