
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடர் முடிந்து வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்து வரும் அவர் மீண்டும் இந்திய அணிக்காக திரும்ப காத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக முகமது ஷமி ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துக் கொண்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்த தகவல்களும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்திய அணிக்கு எந்த ஒரு போட்டியும் இல்லாத வேளையில் அடுத்ததாக வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் திரும்புவதற்காக தற்போது முகமது ஷமி தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீப காலமாக எந்த ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்காத ஷமி பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : கோச் செய்யாததை செஞ்சாரு.. டிஎன்பிஎல் மாதிரி அந்த கோப்பையை ஜெய்ப்பதே அஸ்வினோட கனவு.. பாபர் இந்திரஜித்
இந்திய அணியில் உள்ள பவுலர்களும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என அணியின் பயிற்சியாளர் கம்பீர் கூறிவரும் வேளையில் தற்போது அவரது சொந்த கிராமத்தில் முகமது ஷமி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.