
இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 33 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அது தவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் அவர் 110 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரராக திகழ்ந்த முகமது ஷமி ஒட்டுமொத்தமாகவே உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெடுகளை கைப்பற்றிய இந்திய பவுலராகவும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் பல்வேறு வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி கடந்த பல மாதங்களாகவே சிகிச்சை மற்றும் ஓய்வினை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க நினைக்கும் முகமது ஷமி அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இணைவார் என்று தெரிகிறது. ஆனாலும் முகமது ஷமி இந்திய அணியில் இணையம் பட்சத்தில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன.
ஏனெனில் தற்போது 33 வயதாகும் அவர் இனியும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் அதுவும் குறிப்பாக எந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் விளையாட விரும்புகிறார்? என்பதை அறிந்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் இனியும் தொடர்ந்து விளையாடினால் அடிக்கடி காயம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் அணியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
இதையும் படிங்க : வங்கதேச, இங்கிலாந்து தொடரின் மைதானங்களை மாற்றிய பிசிசிஐ.. 14 வருடத்துக்கு பின் குவாலியருக்கு அடித்த அதிர்ஷ்டம்
இதனால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஷமிக்கு சரியான நேரத்தில் ஓய்வையும் ஒரு சில வடிவங்களில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரை 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட கட்டாயப்படுத்தினால் நிச்சயம் வெகு விரைவாக மீண்டும் அவர் காயம் ஏற்பட்டு அணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.