- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்டின் சாதனையை காலி செய்த முகமது ரிஸ்வான் – விவரம் இதோ

வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னிலை வகித்துள்ளது.

சாதனைகளுக்கு மேல் சாதனையை நிகழ்த்திய ரிஸ்வான் :

வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருப்பது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் பாகிஸ்தான் அணிக்காக நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் ஆட்டம் மட்டும் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 171 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 51 ரன்களையும் அடித்து முகமது ரிஸ்வான் மட்டும் தனிநபராக அந்த அணிக்காக போராட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதோடு அவரது இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் சில சாதனைகளையும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை பின்னுக்கு தள்ளி தற்போது ரிஸ்வான் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரே போட்டியில் 203 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது 222 ரன்கள் அடித்து ரிஸ்வான் அதனை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரிஸ்வான் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக ஜாஸ் பட்லர் 152 ரன்கள் அடித்திருந்த வேளையில் தற்போது ரிஸ்வான் 171 அடித்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். அதுமட்டும் இன்றி பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற 44 ஆண்டு கால சாதனையும் இவர் முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : இதைவிட மட்டமான ஆட்டம் இருக்கவே இருக்காது.. பாகிஸ்தான் வீரர்களை வறுத்தெடுத்த கம்ரான் அக்மல் – விவரம் இதோ

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தஸ்லீம் ஆரிப் 210 ரன்கள் அடித்திருந்தார். அதனை தற்போது ரிஸ்வான் முறியடித்துள்ளார். இப்படி சாதனைகளுக்கு மேல் சாதனை செய்து இருந்தாலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -