ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் அடிச்சாரு.. ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பையும் கொடுங்க.. ஃகைப் கோரிக்கை

Mohammed Kaif
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்தத் தொடரில் மொத்தம் 712 ரன்கள் குவித்த யசஸ்வி ஜெய்ஸ்வால் சந்தேகமின்றி தொடர் நாயகன் விருதை வென்றார். குறிப்பாக முதல் போட்டியிலேயே அதிரடியாக 80 (76) ரன்கள் அடித்த அவர் 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

அதை விட 3வது போட்டியில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட ஜெய்ஸ்வால் மொத்தம் 12 சிக்சருடன் 214* ரன்கள் விளாசினார். மேலும் 4வது போட்டியில் 73 ரன்கள் விளாசி கடைசிப் போட்டியில் 57 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

கைப் கோரிக்கை:
அத்துடன் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில், ஒரு போட்டியில், ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற 3 உலக சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்தார். முன்னதாக 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு உதவிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்து 625 ரன்கள் விளாசினார்.

அப்படி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாக களமிறங்கவில்லை. எனவே இனிமேலும் யோசிக்காமல் தாமதிக்காமல் ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுக்குமாறு தேர்வு குழுவினர் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு முன்னாள் வீரர் முகமது ஃகைப் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஜெய்ஸ்வாலை நாம் ரஞ்சிக் கோப்பையிலும் ஐபிஎல் தொடரிலும் பார்த்துள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் அற்புதமான வீரர். இன்னும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக வேண்டும். அந்த வாய்ப்பையும் அவருக்கு கொடுங்கள். அவர் டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய வீரர்”

இதையும் படிங்க: 72 சிக்ஸர்கள்.. இங்கிலாந்தை நொறுக்கி இந்தியா உலக சாதனை படைக்க ரகசியம் என்ன? டிராவிட் சொன்ன பதில்

“ஒரு பேட்ஸ்மேனாக அவரிடம் தடுப்பாட்டம் மற்றும் அட்டாக் செய்து விளையாடுவதற்கான 2 டெக்னிக்கும் உள்ளது. குறிப்பாக தேவைப்படும் போது அடிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக 6 அல்லது 7வது கியரில் விளையாடும் திறமை அவரிடம் உள்ளது. டெஸ்ட் போட்டியிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக 3 தொடர்ச்சியான பந்துகளில் சிக்ஸர் அடித்தது ஒரு பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு திறமையை கொண்டுள்ளார் என்பதை காண்பித்தது” என்று கூறினார்.

Advertisement