முதல் ஒருநாள் போட்டியில் அவரை சேக்காதது சுப்மன் கில்லோட தப்பு – முகமது கைப் விமர்சனம்

Kaif
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது பெர்த் மைதானத்தில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடாதது தவறு : முகமது கைப்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை மறுதினம் அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை சேர்க்காதது சுப்மன் கில் செய்த தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டுமென்று கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் சென்றது சரிதான். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை பொருத்தவரை ஆஸ்திரேலிய மைதானங்களில் குல்தீப் யாதவ் போன்ற ஒரு வீரரை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் ரிஸ்ட்டை பயன்படுத்தி பந்துவீசும் ஷேன் வார்னே ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்து வகையான போட்டிகளிலும் இடம்பெற்று விளையாடி இருந்தார். அவரை போலவே குல்தீப் யாதவாலும் நிச்சயம் ஆஸ்திரேலியா மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பந்து அதிகளவில் சுழலாது என்றாலும் குல்தீப் யாதவின் பந்துச்சு முறை பேட்ஸ்மன்களுக்கு கணிக்க கடினமாக இருக்கும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

எனவே சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்துவதை விட முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை முதல் போட்டியில் சேர்த்திருக்க வேண்டும் அது சுப்மன் கில் செய்த தவறுதான் இருப்பினும் எதிர்வரும் போட்டிகளில் அவர் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்றும் முகமது கைப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement