இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியில் விளையாடியிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணிக்குள் வருவார் என்று தெரிகிறது.
கம்பீரின் ஆதரவு காரணமாகவே தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து வரும் ஹர்ஷித் ராணா பெரியளவில் பந்துவீச்சில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதினால் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் என்று தெரிகிறது.
அடிலெய்டு மைதானத்தில் கூடுதல் உயரம் கொண்ட பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு எடுபடும் என்பதனாலே இந்த மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற வகையில் வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்றே தெரிகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ
இதையும் படிங்க : முதல் போட்டியில் மிஸ் ஆகிடுச்சு.. ஆனா இரண்டாவது போட்டியில் மிஸ் ஆகாது.. ரோஹித், கோலிக்கு – கவாஸ்கர் ஆதரவு
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) அக்சர் படேல், 7) வாஷிங்டன் சுந்தர், 8) நிதீஷ் ரெட்டி, 9) முகமது சிராஜ், 10) அர்ஷ்தீப் சிங், 11) பிரசித் கிருஷ்ணா.



