என்சிஏ சிஸ்டத்தில் ஏதோ தப்பு நடக்குது, அவருக்கு என்னாச்சுன்னு ஓப்பனா ரசிகர்களுக்கு சொல்லுங்க – லக்ஷ்மனை கைஃப் கோரிக்கை

Moahmmed Kaif VVS Laxman
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயமடைந்து வருவது இந்திய ரசிகர்களுக்கு புரியாத புதிராகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தோல்விகளையும் கொடுத்து வருகிறது. கடந்த 2016இல் அறிமுகமாகி தன்னுடைய வித்தியாசமான பந்து வீச்சு ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

Bumrah

- Advertisement -

அந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் 2022 டி20 உலகக் கோப்பையில் எப்படியாவது விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசரமாக மீண்டும் களமிறங்கிய அவர் ஓரிரு போட்டிகளில் மட்டும் விளையாடி மீண்டும் காயமடைந்து வெளியேறினார். அதனால் எதிர்பார்க்கப்பட்டது போலவே 2022 டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

கைஃப் கேள்வி:
ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதால் அவர் விலகுவதாக அடுத்த நாளே பிசிசிஐ அறிவித்ததால் பார்டர் – கவாஸ்கர் கோப்பை மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்சிஏ’வில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் முதுகு புறத்தில் காயத்தை சந்தித்த அவர் தற்போது நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வருவதால் அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில் தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Laxman

பொதுவாக காயமடைந்த வீரர்கள் என்சிஏ’வுக்கு சென்று 100% முழுமையாக குணமடைந்து விட்டார்கள் என்ற சான்றிதழ் பெற்ற பின்பு தான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் பும்ரா மட்டுமல்லாமல் சமீப காலங்களில் தீபக் சஹர் போன்ற சில முக்கிய வீரர்கள் முழுமையாக குணமடைந்து களமிறங்கினாலும் மேற்கொண்டு முழுமையாக 3 போட்டிகள் கூட விளையாடாமல் மீண்டும் வெளியேறி விடுகிறார்கள். அதனால் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன தான் நடக்கிறது என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த அடுத்தடுத்த காயங்கள் என்சிஏ சிஸ்டத்தில் ஏதோ தவறு இருப்பது தெளிவாக காட்டுவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் என்சிஏ’வில் என்ன நடக்கிறது என்பதையும் தற்போது பும்ரா எந்த நிலையில் இருக்கிறார் எப்போது குணமடைந்து விளையாடுவார் என்பதை இந்திய ரசிகர்களுக்கு தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் எந்த ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Kaif

“சிஸ்டத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை நான் கவனித்துள்ளேன். இந்திய அணிக்காக முழுமையாக ஃபிட்டாகி விளையாட தேர்வாகும் வீரர்கள் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே மீண்டும் காயமடைந்து வெளியேறுகிறார்கள். அது பும்ராவுக்கு சமீபத்தில் நடைபெற்றது. முகமது ஷமியும் சில சமயங்களில் அதை சந்தித்தார். எனவே என்சிஏவில் இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையிலான பயிற்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இந்த சூழ்நிலைகளை கவனத்துடன் கையாள வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் பும்ரா விளையாடுவார் என காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது நியாயமற்ற ஏமாற்றத்தை கொடுக்கிறது. குறிப்பாக எனக்கு இது மிகவும் முக்கியமான பிரச்சினையாக தோன்றுவதால் என்சிஏ நிர்வாகம் இதை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் குணமடைந்ததாக அறிவிப்பதற்கு முன்பாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அனைத்து வீரர்களும் முழுமையாக சோதிக்கப்பட வேண்டும். அதில் எந்த மறைமுகமான செயலும் இருக்கக் கூடாது”

இதையும் படிங்க:

“ஒன்று ஒரு வீரர் ஃபிட்டாக வரவேண்டும் அல்லது எக்ஸ்ட்ரா 10 – 20 நாட்கள் குணமடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பும்ராவின் ரசிகனாக அவருடைய காயம் மற்றும் எப்போது குணமடைந்து வருவார் என்ற விவரங்களை அறிய அறிய விரும்புகிறேன். எனவே அவர்கள் இந்த வெளிப்படையை தன்மையை நிவர்த்தி செய்து சரியான தகவலை ரசிகர்களுக்கு முன்வைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement