இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதலாவது போட்டியில் 8 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகிய அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலாவது ரன்களை குவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
விராட் கோலி தடுமாற இதுவே காரணம் : முகமது கைப்
ஆனால் இன்று அடிலெய்டு நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். இப்படி ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டங்களில் இருமுறை டக் அவுட்டாவது அவரது கரியரிலே இதுவே முதல் முறை. அதிலும் குறிப்பாக ஐந்தாவது ஸ்டம்பிற்கு வரும் பந்தை அடிக்க ஆசைப்பட்டு அவர் இரண்டு முறையும் ஆட்டமிழந்துள்ளார்.
இப்படி விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வருவது அவர் மீது விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளதால் அவர் விரைவில் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி இப்படி ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ந்து தடுமாறி வருவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
எப்பொழுதுமே ஒரு வீரர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தால் மட்டுமே அவர்களது ரிதம் மட்டும் டச் இரண்டும் அவர்களது கையில் இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் நல்ல ரிதத்தில் இருக்கும் போது பந்து எங்கு வந்தாலும் கண்கள் பந்தை சரியாக கணித்து அவரது கைகள் தானாகவே அங்கு செல்லும். ஆனால் தற்போது விராட் கோலி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக வந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா எங்கயும் போகமாட்டார்.. அவரது எதிர்காலம் குறித்து பேசிய முகமது கைப் – விவரம் இதோ
அதனால் அவரது பேட்டிங் டச் மற்றும் ரிதம் ஆகியவை இல்லாமல் இருக்கிறது. அதுவே இப்படி அவர் அடுத்தடுத்து டக் அவுட்டாக காரணம். அவர் நல்ல ரிதத்திலும், டச்சிலும் இருந்தால் தானாகவே ரன்கள் வரும். தற்போது அவர் தொடர்ச்சியாக விளையாடாமல் இருப்பதே அவரது இந்த பேட்டிங் சரிவுக்கு காரணம் என்றும் முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



