இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியது. இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பியதாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். அதனாலேயே ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய விராட் கோலி ஃபார்மை மீட்டெடுக்க 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடியதாக ஃகைப் கூறியுள்ளார்.
ஆனால் இங்கிலாந்து தொடருக்கான அணி தேர்ந்தெடுப்பதற்கு முன் கடைசி நேரத்தில் பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்துள்ளதாகவும் கைப் சாடியுள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர விரும்பினார் என்று நினைக்கிறேன்”
விரும்பிய கோலி:
“அப்போது பிசிசிஐயுடன் சில மறைமுகமான பேச்சுப் வார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம். குறிப்பாக கடந்த 5 – 6 வருடங்களாக வெளிப்படுத்திய ஆட்டத்தையும் சுமாரான ஃபார்மையும் விராட் கோலியிடம் தேர்வுக்குழுவினர் எடுத்துக்காட்டி இனிமேலும் நீங்கள் அணியில் பொருந்துவதற்கு தகுதியற்றவர் என்று சொல்லியிருக்கலாம். மிகச் சரியாக என்ன நடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது”
“ஆனால் திரை மறைவுக்குப் பின் இதுவே நடந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்கு விரும்பிய காரணத்தாலேயே விராட் கோலி ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கடந்த 2 வாரங்களில் நிலைமைகள் மாறின. பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவிடமிருந்து விராட் கோலி ஆதரவைப் பெறாமல் இருந்திருக்கலாம்”
வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ:
“கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி அவசரமாக ரன்கள் அடிக்கப் பார்த்தார். கடந்தக் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மணிகணக்கில் நின்று ரன்கள் குவித்தார். ஆனால் சமீப காலங்களில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் விக்கெட்டை இழந்தார். அதனால் அவர் பொறுமையை இழந்திருக்கலாம். என்னுடைய கேரியரின் கடைசி காலத்தில் இருக்கும் நான் நங்கூரமாக நின்று சதத்தை அடித்து என்ன செய்யப் போகிறேன்? என்று விராட் கோலி நினைத்திருக்கலாம்”
இதையும் படிங்க: ரிட்டயர்டு ஆனாலும் ரோஹித், கோலி விடயத்தில் எந்த மாற்றமும் இல்ல.. எல்லா சலுகையும் உண்டு – பி.சி.சி.ஐ செயலாளர் பதில்
“முன்பெல்லாம் விராட் கோலி நங்கூரமாக நின்று நிறைய பந்துகளை தவற விட்டு பொறுமையுடன் பவுலர்களை களைப்படையை வைத்து அசத்துவார். ஆனால் அதை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரே மாதிரியாக விக்கெட்டை இழந்த அவர் களத்தில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட தயாராக இல்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதை நம்மால் சரி செய்ய முடியாது என்ற எண்ணம் மற்றும் பிசிசிஐ கொடுத்த தொடர்பை வைத்து விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்” என்று கூறினார்



