இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் வைத்து வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2025-26 ஆண்டுக்கான ஒப்பந்த ஊதிய பட்டியலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அந்த ஒப்பந்த ஊதிய பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய நால்வரும் இடம் பிடித்திருந்தனர்.
ரோஹித் மற்றும் கோலி ஒப்பந்த பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை : பி.சி.சி.ஐ
அவர்களுக்கு ஆண்டிற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர்.
ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் இனி அவர்கள் ஒரே பார்மேட்டில் மட்டுமே விளையாடுவார்கள் என்பதனால் ஏ ப்ளஸ் பிரிவு சம்பளத்தில் நீடிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஒரு ஃபார்மெட்டில் மட்டும் விளையாடும் வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அளிக்கப்படாது என்பதனால் அவர்களது இந்த ஒப்பந்தம் தொடருமா? என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக பி.சி.சி.ஐ-யின் செயலாளர் சைக்கியா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களின் ஏ ப்ளஸ் கிரேடு ஒப்பந்தம் தொடரும். ஏனெனில் இன்னும் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே உள்ளனர். மாபெரும் இரண்டு வீரர்களுக்கான அனைத்து சலுகைகளும் தொடர்ந்து கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கில்லுக்கு கேப்டன்சி பதிலா இந்த பொறுப்பை கொடுங்க.. சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு தரலாம்.. வாசிம் ஜாபர்
இதன் மூலம் அவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பட்டியலில் எவ்வித சரிவும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாகவே அவர்களது ஊதிய ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் பிசிசிஐ அவர்கள் இருவருக்கும் இந்த சிறப்பு சலுகையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



