எப்படா வீட்டுக்கு அனுப்பலாம்ன்னு பாத்தவங்களுக்கு பதிலடி கொடுத்த.. விராட், ரோஹித் தெ.ஆ’வில் தேவை.. ஃகைப் பேட்டி

Mohammed Kaif
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. ஆனால் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதனால் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்த்தது.

அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 74* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினர். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விடத் துடிக்கும் தேர்வுக்குழுவுக்கும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் அவர்கள் பதிலடி கொடுத்தனர் என்றே சொல்லலாம். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை ரோஹித் தலைமையில் இந்தியா வென்றது.

- Advertisement -

காத்திருந்த கம்பீர், அகர்கர்:

அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் அத்தொடரில் கோப்பையை வென்று ஓய்வு பெற உள்ளதாக விராட், ரோஹித் சர்மா ஏற்கனவே தெரிவித்தனர். ஆனால் அப்போது 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியாது என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது.

அதனாலேயே ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் எப்படி வீட்டுக்கு அனுப்பலாம் என்று நினைக்கும் அகர்கர், கம்பீருக்கு சிட்னியில் விராட், ரோஹித் ஜோடியாக பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் 2027 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர்களுடைய முக்கியத்துவம் பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

விராட், ரோஹித் தேவை:

“தாங்கள் தோல்வியை சந்திப்பதைப் பார்க்க சிலர் காத்திருக்கிறார்கள் என்பது விராட், ரோஹித் மனதுக்குள் இருக்கும். அதற்காக தேர்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட், ரோஹித் தங்களைத் தீர்மானித்துக் கொண்டுள்ளனர். அவர்களுடைய முகத்தில் பாருங்கள். அங்கே கவனம் மற்றும் அமைதி தென்படுகிறது. தற்போது அவர்களிடம் எக்ஸ்ட்ரா உறுதி தெரிகிறது”

இதையும் படிங்க: விமர்சித்த நானே சொல்றேன்.. ஹர்ஷித் ராணா அதுல அசத்திட்டாரு.. இதை தொடரனும்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

“அவர்கள் தங்களை ஒருநாள் அணியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்பதில் எக்ஸ்ட்ரா உறுதியுடன் இருக்கிறார்கள். 2027 உலகக்கோப்பை நடைபெறும் தென்னாப்பிரிக்காவில் அனுபவமிக்க அவர்கள் அணியில் இருக்க வேண்டும். ஏனெனில் அங்குள்ள பவுன்ஸ் பிட்ச்களில் அனுபவத்தால் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். ரோஹித் சர்மா வயது வெறும் நம்பர் என்பதைக் காண்பித்துள்ளார். மக்கள் விராட், ரோஹித்தை ஆதரிப்பார்கள். ஏனெனில் அவர்கள் எதுவும் தவறாக செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement