
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கியுள்ளார். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவருடைய சுமாரான ஆட்டம் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக 2012க்குப்பின் ரஞ்சிக் கோப்பையில் இன்று ரயில்வேஸ் அணிக்கு எதிராக துவங்கிய போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.
அந்தப் போட்டியில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பலவீனத்தை விராட் கோலி சரி செய்து விளையாடுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை சரி செய்வதற்காக சஞ்சய் பங்காருடன் சேர்ந்து விராட் கோலி ஸ்பெஷல் பயிற்சிகளையும் எடுத்தார். இந்நிலையில் விராட் கோலி கடைசியாக 2012இல் தாம் விளையாடிய உத்திரபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் டெல்லிக்காக விளையாடியதாக முகமது கைஃப் கூறியுள்ளார்.
அப்போட்டியில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் விராட் கோலி விக்கெட்டை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் 12 வருடங்கள் கழித்து இன்னும் விராட் கோலி அதில் மாறாமல் இருப்பது தம்மால் நம்ப முடியவில்லை என்று அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“2012 போட்டியில் நட்சத்திர வீரர்கள் இருந்தார்கள். உத்தரபிரதேச அணிக்காக நான், சுரேஷ் ரெய்னா, புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார் விளையாடினோம். டெல்லி அணியில் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், விராட் கோலி, ஆசிஷ் நெஹ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடினார்கள். அந்தப் போட்டியில் விராட் கோலி எட்ஜ் கொடுக்கக்கூடும் என்று கருதிய நான் ஸ்லிப் பகுதியில் கவனத்துடன் இருந்தேன்”
“அதே போலவே விராட் கோலி டிரைவ் அடிக்க சென்றதால் கேட்ச் கிடைத்தது. 2012இல் டெல்லிக்கு எதிரான எங்களுடைய அந்தப் போட்டியே விராட் கோலியின் கடைசி ரஞ்சிப் போட்டி என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த வீக்னஸை கொண்டிருந்த விராட் கோலியை அப்போட்டியில் புவனேஸ்வர் குமார் 2 முறை அவுட்டாக்கினார். ஆனால் அதே போலவே 12 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அவுட்டானார்”
இதையும் படிங்க: என் ஹீரோ சச்சின் பாராட்டியதே போதும்.. சாம்பியன்ஸ் ட்ராபியை நினைக்கல.. அதை செய்வேன்.. கருண் நாயர்
“அங்க பலவீனத்தை தாண்டி தன்னுடைய அடிக்கையை கடினமாக பிடித்து அவர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளது அற்புதமானது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 50 சதங்கள் அடித்துள்ளார். தற்போது ரஞ்சித் தொடரில் நல்ல பயிற்சிகளை எடுக்க உள்ள அவர் ஃபார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நன்மை ஏற்படும். எனவே இங்கே அவர் அசத்த வேண்டுமென்று நாம் வேண்டிக் கொள்வோம். அதனால் 2023 உலகக் கோப்பை போல 2025 சாம்பியன்ஸ் டிராவில் அவர் அசத்துவார் என்று நம்புவோம்” எனக் கூறினார்.