என் ஹீரோ சச்சின் பாராட்டியதே போதும்.. சாம்பியன்ஸ் ட்ராபியை நினைக்கல.. அதை செய்வேன்.. கருண் நாயர்

Karun Nair
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கருண் நாயர் 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். அதன் பின் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் 6 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக போராடி வருகிறார். அந்த வாய்ப்பில் கடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 779 ரன்களை 389.50 என்ற சராசரியில் குவித்தார்.

அதன் காரணமாக அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லையெனில் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த 2 வாய்ப்பையுமே கொடுக்காத தேர்வுக்குழு கருண் நாயரை மீண்டும் கழற்றி விட்டது.

- Advertisement -

வாழ்த்திய சச்சின்:

அது பற்றி கேட்டதற்கு அற்புதமாக விளையாடிய கருண் நாயர் பற்றி விவாதித்ததாக தெரிவித்த அஜித் அகர்கர் 15 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தமக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கருண் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடாமல் விடமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் விஜய் ஹசாரே கோப்பையில் அசத்தியதால் தம்மை தமது ஹீரோ சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷலாக பாராட்டியதும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியின் விவாதத்தில் தம் பெயர் இருந்ததுமே போதும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கருண் நாயர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பற்றி நான் சிந்திக்கவில்லை. எனக்கு அது மிகவும் தூரத்தில் இருக்கிறது”

- Advertisement -

நாயர் பெருமிதம்:

“இருப்பினும் நீங்கள் கனவு கண்டு சிந்தித்து சாதனைகளை செய்ய விரும்புவீர்கள். எனவே உங்களால் முடியாது என்று நினைக்கக் கூடாது. முடியும் என்று நினைக்க வேண்டும். அது நடக்குமா இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கும். ஏற்கனவே சொன்னது போல் இப்போதும் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவு என்னிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: உங்களிடம் 360 டிகிரி திறமை இருந்தாலும் இதை செய்யலன்னா ஜெய்க்க முடியாது.. சூரியகுமாருக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

“அந்தத் தொடருக்கு கருதப்படுவேன் என்று கூட நான் நினைக்கவில்லை. இருப்பினும் அதற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். உங்களுடைய இளம் வயது ஹீரோவிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு சிறந்த அங்கீகாரமாகும். அது அற்புதமான தருணம். எனக்காக வாழ்த்து தெரிவித்த சச்சின் அவர்களுக்கு நன்றி. இங்கிருந்து நான் தொடர்ந்து கவனத்துடன் நன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement