ரோஹித்துக்கு நேர்எதிராக சுதர்சனிடம் என்ன அவசரம்? இந்திய அணியை குழப்பும்.. கம்பீரை சாடிய கைஃப்

Mohammed Kaif
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து 3வது இடத்தில் வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மற்றொரு தமிழாக வீரர் வாசிங்கன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஏனெனில் 3வது இடத்தில் நிலையாக விளையாட வைப்பதற்காகவே கருண் நாயரை கழற்றி விட்ட இந்திய அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளித்து வந்தது. அந்த வாய்ப்பில் கடந்த இங்கிலாந்து தொடரில் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடிய சுதர்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 2வது போட்டியில் 87 ரன்கள் அடித்தார். அதனால் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுதர்சன் திடீரென பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

குழம்பும் கம்பீர்:

மறுபுறம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதற்கு முந்தைய காலங்களில் லோயர் ஆர்டரில் சிறப்பாக விளையாடியுள்ளார். தற்போது அவரை திடீரென 3வது இடத்தில் விளையாட வைக்கும் வித்தியாசமான முடிவை இந்திய அணி எடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தொடர்ந்து குழப்பி வருவதாக முன்னாள் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக இளம் வீரரான சாய் சுதர்சனை 2வது தொடருடன் கழற்றி விடும் அளவுக்கு என்ன அவசரம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி இருந்தால் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் எப்படி வளர்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு. “தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் குவித்த 24 வயது சாய் சுதர்சனை நீக்கியுள்ள முடிவு புதிரானது”

- Advertisement -

கைஃப் விமர்சனம்:

“வயது அதிகரிப்பதன் காரணமாக ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக நம்மிடம் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அதே இந்திய அணி நிர்வாகம் இந்த இளம் வீரரிடம் பொறுமையைக் காட்டவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சமிக்கைகள் இந்திய அணியின் உடைமாற்றும் அறைக்கு நல்லதல்ல” என்று கௌதம் கம்பீர் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. சாய் சுதர்சன் விடயத்தில் நிர்வாகம் செய்தது பெரிய தப்பு – அணில் கும்ப்ளே கருத்து

ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் வரிசை இசை நாற்காலி போல் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இருப்பினும் யாருடைய பேச்சையும் கேட்காத கம்பீர் தம்முடைய விருப்பம் போல பேட்டிங்கை மாற்றி வருகிறார். அதனால் இந்திய அணி வீரர்களிடம் குழப்பமும் பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement