16க்கு 15 வெற்றி.. 16 வருடம் இந்தியாவுக்காக பாடுபட்ட ரோஹித்துக்கு 1 வருஷம் தர முடியாதா? ஃகைப் விமர்சனம்

Mohammed Kaif
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பல ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளை பந்தாடிய இந்தியா 11 தொடர் வெற்றிகளுடன் ஃபைனல் சென்றது.

அத்தொடரில் தோல்வியை சந்தித்தாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் அவரது தலைமையில் 12 வருடம் கழித்து வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக்கோப்பை வரை ரோஹித் சர்மா விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

16 வருடத்துக்கு 1 வருடம் கிடையாதா:

இருப்பினும் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் ரோஹித் தலைமையில் கடைசியாக விளையாடிய 16 ஐசிசி போட்டிகளில் 15 வெற்றிகளைப் பெற்ற இந்தியா 2 கோப்பைகளை முத்தமிட்டதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அப்படி 16 வருடங்கள் நாட்டுக்காக பாடுபட்டவருக்கு ஓரிரு வருடம் கூடுதலாக கேப்டன்ஷிப் பொறுப்பு கொடுக்க முடியாதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா இந்தியாவுக்காக 16 வருடங்கள் விளையாடிக் கொடுத்தார். ஆனால் நாம் அவருக்கு கேப்டனாக இன்னும் ஒரு வருடம் கொடுக்கவில்லை. அவரது தலைமையில் 16 ஐசிசி போட்டிகளில் இந்தியா 15 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மட்டுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது”

- Advertisement -

கைப் ஆதங்கம்:

“அது போக துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ரோகித் ஆட்டநாயகன் விருது வென்றவர். அங்கே அசத்திய அவர் கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்தார். 2024 டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றது அவருடைய பெயரில் இருக்கிறது. அப்போது ஓய்வு பெற்ற அவர் தன்னுடைய தனித்தன்மையைக் காண்பித்தார்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றிங்களா? விதிமுறை தெரியாமல் அம்பயருடன் மோதிய பாக் கேப்டன்.. நடந்தது என்ன?

“குறிப்பாக நாங்கள் 2024 உலகக் கோப்பையை வென்றுள்ளோம், இது புதிய வீரர்கள் வருவதற்கான நேரம் என்று சொன்ன அவர் விடை பெற்றார். அப்படி வெற்றியுடன் விடைபெற்ற அவர் மற்றொருவருக்கு வெளிச்சத்தைக் கொடுத்தார். தங்களுடையப் பெயரை தைய்க்கும் மக்கள் கொண்ட இந்தியாவில் ரோஹித் அதை செய்யவில்லை. ஆனால் நாம் அவருக்கு இன்னும் ஒரு வருடம் வாய்ப்பு வழங்கவில்லை. எப்படியும் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் நீக்கப்பட்டு கில் கேப்டன் ஆவார். ஆனால் அதை இவ்வளவு வேகமாக செய்யக்கூடாது” என்று கூறினார்.

Advertisement