கேமரா இருந்ததால் முடியாதுன்னு சொல்லிட்டாரு.. ஸ்மித்தின் சீட்டிங்கை அஸ்வின் உடைத்தது பற்றி.. கைப் வியப்பு

Mohamed Kaif
- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார். 2010 முதல் 3 வகையான ஃபார்மெட்டிலும் விளையாடி அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 38 வயதாகும் அவர் தற்போது வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அஸ்வின் என்றாலே அடிப்படை விதிமுறைகளை ஆராய்ந்து புதிய திட்டங்களுடன் விளையாடி கிரிக்கெட்டை பற்றி கூர்மையாக பேசக்கூடியவராக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஸ்டீவ் ஸ்மித் செய்த ரகசிய ஏமாற்று வேலையை கண்டறிந்தது பற்றி முகமது கைப் வியப்புடன் பகிர்ந்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின், அக்சர் படேல் எப்போதும் சவாலை கொடுக்கும் இந்திய பவுலர்களாக கருதப்படுகின்றனர்.

- Advertisement -

கைப் வியப்பு:

அவர்கள் 2021 ஐபிஎல் தொடரில் ஸ்மித்துடன் டெல்லி அணியில் விளையாடினார்கள். அப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடும் போது அவர்களை நன்றாக அடிப்பதற்காக டெல்லி அணியின் வலைப்பயிற்சியில் ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வின், அக்சர் படேல் பவுலிங்கை ஸ்மித் ரெக்கார்ட் செய்ததாக கைப் கூறியுள்ளார். இது பற்றி 2021இல் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக இருந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“2020இல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அஸ்வின் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர் புதிய பந்தில் பவர் பிளே ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். அதே வருடம் நவம்பர் மாதம் துபாயில் 2021 டி20 உலகக்கோப்பை நடைபெறவிருந்தது. அந்த வருட ஐபிஎல் தொடரும் துபாயில் நடைபெற்றது. அந்த சூழ்நிலையில் பயிற்சியில் அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்தி விட்டார்”

- Advertisement -

கூர்மையான அஸ்வின்:

“ஏன் என்று கேட்டதற்கு என்னால் பவுலிங் செய்ய முடியாது என்று அஸ்வின் சொல்லி விட்டார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் தனது ஹெல்மெட்டில் கேமரா வைத்துள்ளதாக அஸ்வின் என்னிடம் கூறினார். அதை வைத்து அஸ்வின், அக்சர் போன்ற இந்திய பவுலர்களின் பவுலிங்கை அவர் ரெக்கார்ட் செய்தார். அதை அறிந்த அஸ்வின் இவர் ரெக்கார்ட் செய்வதால் நான் பந்து வீச மாட்டேன் என்று சொன்னார்”

இதையும் படிங்க: பும்ரா தலைமையிலான இந்திய அணியை அடிக்க திட்டம் வெச்சுருக்கேன்.. 19 வயது ஆஸி வீரர் சவால்

“அவரைப் பார்த்து மற்ற பவுலர்களும் பந்து வீசவில்லை. அந்தளவுக்கு கூர்மையாக இருந்த அஸ்வின் ரெக்கார்ட் செய்வதை கண்டுபிடித்து விட்டார். அன்று அஸ்வின் அந்த இடத்தில் விழிப்புணர்வுடன் இருந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அன்று கிரிக்கெட்டில் அஸ்வின் ஒரு கூர்மையான மூளையை கொண்டவர் என்பதை காண்பித்தார்” எனக் கூறினார்.

Advertisement