லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அந்தத் தோல்விக்கு ரிஷப் பண்ட் ரன், கருண் நாயர் சொதப்பல் போன்ற விஷயங்கள் காரணமானதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் தம்மைப் பொறுத்த வரை 2வது நாளில் முகமது சிராஜ் வார்த்தைகளைக் கேட்டு கேப்டன் சுப்மன் கில் பந்தை மாற்றியதே தோல்விக்கு காரணமானதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
அதாவது 251/4 என்ற கணக்கில் இங்கிலாந்து 2வது ஆட்டத்தை துவங்கிய போது பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது பந்தின் வடிவம் மாறியிருந்ததாக சொல்லி இந்திய அணியினர் வேறு பந்தை கேட்டனர்.
சிராஜ் செய்த சேட்டை:
அப்போது அதை விட மோசமாக இருந்த பந்தை நடுவர்கள் கொடுத்தனர். அதற்கு முன்பு வரை வீசப்பட்ட பந்து 2.1 டிகிரி ஸ்விங்காகி இந்தியாவுக்கு கொடுத்தது. ஆனால் மாற்றப்பட்ட புதிய பந்து 0.9 டிகிரி குறைவாக ஸ்விங்காகி இனியாவுக்கு பெரிய உதவியை செய்யவில்லை. அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து 387 ரன்கள் அடித்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
அதற்கு முக்கிய காரணமாக அமைந்த சிராஜ் கேப்டன் கில்லுடன் சேர்ந்துக்கொண்டு 3வது நாளில் ஜாக் கிராவ்லியிடம் வம்பிழுத்ததாக கைஃப் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டிங் செய்ய வந்த பும்ராவை காயப்படுத்தும் நோக்கத்தில் பவுன்சர்களைப் போட்டு தள்ளியதாகவும் கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் எப்போதும் உணர்வு பூர்வமாக இருக்கிறார்”
ஃகைப் விமர்சனம்:
“எனவே பந்தை மாற்ற வேண்டும் என்று அவருடைய அழைப்பை ஏற்றது தவறு. மாற்றப்பட்ட பந்து நகரவில்லை. 3வது நாளில் கிராவ்லி அவுட்டாகவில்லை எனில் அடுத்த நாளில் அவுட்டாவார். ஏனெனில் அவர் ஃபார்மில் இல்லை. அவர் நேரத்தை வீணடித்த போது கில் பொறுமையை இழந்தார், சிராஜ் அவருடன் சேர்ந்து கொண்டார். அவரை அவுட்டாக்கிய நித்திஷ் ரெட்டியும் கொண்டாடினார். நீங்கள் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். ஆனால் அதற்கான சரியான தேர்ந்தெடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: 193 ஈஸி டார்கெட்.. கில், ஜெய்ஸ்வால் செஞ்ச தப்பால் தோத்துட்டோம்.. இந்தியா கம்பேக் கொடுக்கும்.. ஷமி பேட்டி
“அதன் காரணமாக பும்ராவுக்கு எதிராக ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் பவுன்சர்களை போடுவதற்கு திட்டமிட்டார்கள். ஒருவேளை அதில் பும்ரா அவுட்டாகவில்லை என்றால், அவருடைய விரல் அல்லது தோள் அல்லது தலையில் அடிப்பதே அவர்களுடைய திட்டம். பொதுவாகவே நம்பர் ஒன் பவுலரை காயமடைய வைக்க வேண்டும் என்பது மற்றொரு எதிரணியின் முதன்மை பவலர்களின் திட்டமாக இருக்கும்” எனக் கூறினார்.



