193 ஈஸி டார்கெட்.. கில், ஜெய்ஸ்வால் செஞ்ச தப்பால் தோத்துட்டோம்.. இந்தியா கம்பேக் கொடுக்கும்.. ஷமி பேட்டி

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் ரவீந்திர ஜடேஜா டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து 61* ரன்கள் அடித்தும் இந்தியாவால் வெற்றியை தொட முடியவில்லை.

இந்நிலையில் 193 என்பது மிகவும் சுலபமான இலக்கு என்று முகமது ஷமி கூறியுள்ளார். ஆனால் ஜடேஜாவை போல ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் பொறுமையாக விளையாடாததே இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டதாக ஷமி தெரிவித்துள்ளார். இருப்பினும் 4வது போட்டியில் வென்று இந்தியா தொடரை சமன் செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஈஸியான டார்கெட்:

இது பற்றி ஷமி பேசியது பின்வருமாறு. “193 பெரிய இலக்கு போல தெரியவில்லை. அதனால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ட்விஸ்ட் வந்தது. ஜெய்ஸ்வால் பொறுமையைக் காட்டாமல் தேவையற்ற ஷாட்டை விளையாடி டக் அவுட்டானார். 193 ரன்களை துரத்தும் உங்களுக்கு 5 செஷன் இருக்கும் போது பொறுமையைக் காட்ட வேண்டும். ஆனால் அதை காட்டாத அவரைப் போல மற்ற பேட்ஸ்மேன்களும் பங்காற்றவில்லை”

“4வது நாளில் 58/4 என நீங்கள் கட்டுப்படுத்தப்பட்டால் வெற்றி பெறுவது கடினம். அந்த பிட்ச்சில் எந்த பேயும் இல்லை. எனவே பொறுமையைக் காண்பித்திருந்தால் நாம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சுப்மன் கில் முதல் பந்திலேயே ஆக்ரோசத்தைக் காண்பித்தார். 5வது நாளிலும் முதல் மணி நேரம் இந்தியா மோசமாக விளையாடியதால் வெற்றியின் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது”

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:

“பும்ராவுடன் சேர்ந்து ஜடேஜா தனது சிறந்தவற்றைக் கொடுத்தார். ஆனால் 112/8 என நீங்கள் விழுந்தால் பவுலர் வந்து பேட்டிங் செய்வது கடினம். ஜடேஜா 4 தொடர்ச்சியான அரை சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார். பவிலிங் செய்யும் போது சந்தித்த லேசான காயத்தைத் தாண்டி சிராஜ் பொறுமையுடன் ஜடேஜாவுடன் சேர்ந்து வெற்றிக்குப் போராடினார்”

இதையும் படிங்க: பும்ராவையும், சிராஜையும் இந்த விடயத்திற்காக பாராட்டியே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது அவர் தடுத்த பந்து ஸ்டம்ப்பில் பட்டதை நாம் துரதிஷ்டவசம் அல்லது விதி என்று சொல்லலாம். ஆனால் இந்தியா விளையாடிய விதத்திற்கு 2 – 1* என்ற கணக்கில் இருந்திருக்க வேண்டும். விழிப்புணர்வு இருந்திருந்தால் வென்றிருக்க முடியும். ஆனால் நாம் தோற்க வேண்டும் என்பது விதி. இங்கிலாந்து சொந்த மண்ணில் சாதகத்தைப் பெற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. இந்தியா அடுத்த போட்டியை டாமினேட் செய்து 2 – 2 என்று தொடரை சமன் செய்யும். கடைசிப் போட்டியை நாம் மகிழ்ச்சியுடன் பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement