இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது. ஆனால் 2வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.
அந்த தோல்விக்கு டிராவிஸ் ஹெட் மீண்டும் இந்தியாவை அடித்து நொறுக்கி 140 ரன்கள் குவித்தது முக்கிய காரணமானது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் சதமடித்த அவர் ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்துள்ளார். அப்படியிருந்தும் அவரை விரைவில் அவுட்டாக்கும் திட்டத்தை கண்டறிய முடியாமல் இந்தியா இன்னும் திணறி வருகிறது.
வலையில் கோலி:
இந்நிலையில் சுமாரான பவுலர்கள் கூட அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசினால் விராட் கோலியை எளிதாக அவுட்டாக்கலாம் என்பதை தெரிந்து வைத்துள்ளதாக முகமது கைஃப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதே பலவீனத்தை கொண்டிருக்கும் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா மட்டும் திணறுவதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் ஃகைப் பேசியது பின்வருமாறு.
“ஸ்காட் போலண்ட் போன்ற பவுலர் ஆஸ்திரேலிய அணிக்காக வருடத்தில் ஓரிரு முறை மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ஆனால் அவருக்கு அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்தை வீசினால் விராட் கோலியை அவுட்டாக்க முடியும் என்பது கச்சிதமாக தெரிகிறது. அதே போலவே விராட் கோலியும் அவரிடம் அவுட்டாகி சென்றார். அது அனைவருக்கும் தெரிந்த திறந்த வெளிய ரகசியமாகி விட்டது”
டிராவிஸ் ஹெட்டுக்கு வலை:
“கோலியை எப்படி வலையில் விழ வைக்கலாம் என்பதை போலண்ட் அறிந்திருந்தால் நம்மால் ஏன் டிராவிஸ் ஹெட்டை அதே வழியில் சிக்க வைக்க முடியாது? அவருடைய பலவீனம் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே இருந்தால் நாம் ஏன் அங்கு தொடர்ந்து பந்து வீசக்கூடாது. இங்கே ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பலவீனம் இருக்கும்”
இதையும் படிங்க: தேவையில்லாம நெருப்பை தட்டி எழுப்பிட்டாரு.. அவரோட மோதியதால் இந்தியாவுக்கு தோல்வி.. பாண்டிங் பாராட்டு
“விராட் கோலிக்கு எதிரான அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் திட்டத்தை நீங்கள் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். அவருக்கு எதிராக நீங்கள் சரியான திட்டத்துடன் செல்ல வேண்டும். முதல் பந்திலிருந்தே அவரை தாக்க வேண்டும். அவருடைய பலவீனத்தை அம்பலப்படுத்த நீங்கள் முதலில் நிலையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதைச் செய்தாலே நீங்கள் அவரை அவுட்டாக்க முடியும்” என்று கூறினார்.



