தேவையில்லாம நெருப்பை தட்டி எழுப்பிட்டாரு.. அவரோட மோதியதால் இந்தியாவுக்கு தோல்வி.. பாண்டிங் பாராட்டு

Ricky Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.

முன்னதாக அந்தத் தொடரின் முதல் போட்டியில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை பவுண்டரி அடித்த அவர் “நீங்கள் மிகவும் மெதுவாக பந்து வீசுகிறீர்கள்” என்று சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய அவர் விராட் கோலி உள்ளிட்ட உலகின் டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பவராக அறியப்படுகிறார்.

- Advertisement -

நெருப்பாக ஸ்டார்க்:

அந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை கோல்டன் டக் அவுட்டாக்கிய ஸ்டார்க் தக்க பதிலடி கொடுத்தார். மேலும் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் முதல் போட்டியிலேயே ஸ்டார்க் உள்ளே இருந்த நெருப்பை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அது பற்றி பாண்டிங் பேசியது பின்வருமாறு. “மிட்சேல் ஸ்டார்க் பொதுவாக சமநிலையுடன் இருக்கக்கூடியவர். அவர் அதிகம் படபடக்க மாட்டார் என்பதை இப்போதும் நீங்கள் பார்க்கிறீர்கள். அப்படிப்பட்ட அவர் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் தன்னிடம் ஏதாவது சொன்னால் தனது முகத்தில் லேசான சிரிப்பால் மட்டுமே பதிலை கொடுப்பார். ஆனால் அந்த சிரிப்பின் பின்புறத்தில் அவருக்குள் நெருப்பு எரியும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

“அதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் எவ்வளவு அழகாக பந்து வீசினார் என்று பாருங்கள். கடந்த சில வருடங்களாக இருந்ததை விட அந்தப் போட்டியில் மிகவும் அற்புதமாக பந்து வீசிய அவர் அதிகமான பாராட்டுக்குரியவர். தற்போது அவரால் மீண்டும் தன்னுடைய கேரியரின் உச்சத்தைப் போல 150 கி.மீ வேகத்தில் வீச முடியும்”

இதையும் படிங்க: காபாவில் இந்திய அணியின் கம்பேக்கிற்கு குறுக்கே வரும் மழை? பிரிஸ்பேன் வெதர் ரிப்போர்ட் இதோ

“பெரும்பாலும் அவர் 140 கி.மீ வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசுவது என்னைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக இளஞ்சிவப்பு நிற பந்தில் அவர் இன்னும் அபாரமாக செயல்படுகிறார். எனவே அவருடைய வேகம் எந்த வகையிலும் குறையவில்லை. அதனால் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் இன்னும் சில வருடங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement