விராட் கோலி இல்லனா சொந்த மண்ணுலயே தோத்துருப்பிங்க.. இந்திய தேர்வுக் குழுவை எச்சரித்த பாக் வீரர்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொடரில் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக் குழுவினர் யோசித்து வருவதாக செய்திகள் வலம் வருகின்றன.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர். எனவே அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

- Advertisement -

பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை:
ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலி உலகின் அனைத்து மைதானங்களிலும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய தரத்தை நிரூபித்தவர். அப்படிப்பட்ட அவரை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று இந்த செய்திகளுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பையில் இந்தியா 3 – 4 தோல்விகளை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை கழற்றி விடுவது இந்தியாவுக்கு பாதிப்பை கொடுக்கும் என்று தேர்வுக்குழுவை எச்சரிக்கும் அவர் இது பற்றி நியூஸ்24 இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இதைப் பற்றி எனக்கு 2வது யோசனை கிடையாது”

- Advertisement -

“உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக 3 – 4 போட்டிகளை தனது வழியில் வென்றுக் கொடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்”

இதையும் படிங்க: சாரை பாத்த அப்றம் தான் தெம்பே வந்துச்சு.. சச்சின் முன் அவருடைய சாதனையை உடைத்தது பற்றி முஷீர் கான்

“எனவே சமீப காலங்களில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்பபவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் உயர்ந்தவர்கள்” என்று கூறினார். இது போக ஸ்டுவர்ட் ப்ராட் போன்ற மேலும் சில வெளிநாட்டு வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement