இந்தியாவில் நடந்த அதே பிரச்சனை.. பயிற்சி போட்டியிலேயே இப்படியா பண்ணுவீங்க.. ஆஸி வாரியத்தை விளாசிய ஹபீஸ்

Mohammed Hafeez
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8வது முறையாக தோற்ற அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதற்கு பொறுப்பேற்று பாபர் அசாம் தம்முடைய அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. புதிய கேப்டன் ஷான் மசூட் தலைமையில் இத்தொடரில் விளையாட உள்ள பாகிஸ்தான் அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடியது.

- Advertisement -

ஹபீஸ் விமர்சனம்:
கான்பெரா நகரில் டிசம்பர் 6 – 9 வரை நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 391/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன் பின் விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் அணி 367/4 ரன்கள் எடுத்த போது 4 நாட்கள் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் அப்போட்டியில் ஒரு இன்னிங்ஸில் கூட 10 விக்கெட்களை எடுக்க முடியாத அளவுக்கு கான்பெரா பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் ஆஸ்திரேலிய வாரியத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

2023 உலகக் கோப்பையில் தங்களை தோற்கடிப்பதற்காக இந்தியா வேண்டுமென்றே சென்னையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்ததாக விமர்சித்திருந்த அவர் தற்போது ஆஸ்திரேலிய வாரியத்தை பற்றி பெர்த் மைதானத்தில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்தது பின்வருமாறு. “அது ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு அணி விளையாடிய மிகவும் ஸ்லோவான பிட்ச்”

- Advertisement -

“நாங்கள் விரும்பும் பிட்ச் இங்கே கிடைக்காது என்பதை அனைவரும் அறிவோம். எனவே அதை மீண்டும் மீண்டும் பேசி ஆஸ்திரேலிய வாரியத்திற்கு எதிராக பிரச்சனையை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இது போன்ற ஏற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்காததால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இது அவர்களின் திட்டமாக இருக்கலாம். நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்”

இதையும் படிங்க: களத்தில் அதை மட்டும் செஞ்சா போதும்.. கேப்டன் கூல் தோனி கோபமாகிடுவாரு.. பின்னணியை பகிர்ந்த ஹெய்டன்

“அதே சமயம் இதை நாங்கள் சாக்காக சொல்லவில்லை. ஆனால் இதே போல அடுத்ததாக வரும் சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற உள்ளது. அதில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.

Advertisement