- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் ஐயருக்கு நடந்த இந்த விஷயம் ரொம்ப கஷ்டமா இருக்கு – முகமது கைப் ஆதங்கம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. துபாய் மண்ணில் மட்டுமே விளையாடிய இந்திய அணி லீக் சுற்று போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. பின்னர் அரையறுதி போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

எனக்கு உண்மையிலேயே ஷ்ரேயாஸ் ஐயரை நினைச்சா கஷ்டமா இருக்கு : முகமது கைப்

அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியையும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்ட வேளையில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாக கேப்டன் ரோகித் சர்மாவே பாராட்டி இருந்தார். இந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டு அரை சதங்களுடன் 243 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 40 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கடந்த ஆண்டு பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஏற்று உள்ளூர் தொடர்களில் ஆடாத அவரை ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து இந்திய அணியின் நிர்வாகம் நீக்கிய வேளையில் ஐபிஎல் தொடர், ரஞ்சி தொடர், சையத் முஷ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க தனது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான பங்களிப்பை வழங்கி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியும் அவரால் ஒரு ஆட்டநாயகன் விருதினை கூட வெல்ல முடியாதது தனக்கு கஷ்டமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் பார்மை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில் அவர் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை என்றாலும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடுகிறார்.

ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவிட்டு நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரணம் கிடையாது. அப்படி விளையாடும்போதும் அவரால் எளிதாக பவுண்டரிகளை அடிக்க முடிவதோடு உடனடியாக அதிரடியாகவும் விளையாட முடிகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் இன்னிங்சை அவர் வலுவாக கொண்டு சென்றதில் மிக முக்கிய பங்கு வகித்தார்.

இதையும் படிங்க : தொடர்நாயகன் விருதை வென்றதில் மகிழ்ச்சி.. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா கஷ்டமா இருக்கு – ரச்சின் ரவீந்திரா

பலவீரர்கள் இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் வருவதும், போவதுமாக இருந்த வேளையில் அவர் அந்த இடத்தினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இந்த தொடரிலேயே இந்திய அணி சார்பாக இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்து அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட்டநாயகன் விருதினை வெல்ல முடியவில்லை என்பது தனக்கு வருத்தம் தான் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -