ஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி

Azhar

இந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மினி ஏலம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.ஏலத்தில் பங்கெடுத்த அணிகள் தங்களது அணிக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.அதில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேரளாவை சேர்ந்த இளம் வீரரான முகமது அசாருதீனை அடிப்படை விலைத் தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ipl trophy

முகமது அசாருதீன் 2016ஆம் ஆண்டிலேயே தனது டி20 கேரியரை தொடங்கிவிட்டார். ஆனால் இந்த வருடம் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரே அவரை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அபாரமான ஃபார்மில் இருந்த இவர் ஐந்து ஆட்டங்களில் ஆடி 214 ரன்களை 53.50 ஆவரேஜ் விகிதத்திலும் 194.54 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்திலும் குவித்தார்.அதிகபட்சமாக மும்பைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் வெறும் 54 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார் மேலும் தனது அணியை எட்டு விக்கெட் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் தனது சேவைகளைப் பெற்ற பிறகு, ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை எவ்வாறு கைவிட்டார் என்பதை அஸ்ஹாருதீன் வெளிப்படுத்தினார். விராட்டை ஒரு ‘கிரிக்கெட் ஐகான்’ என்று பாராட்டிய அஸ்ஹருதீன் 32 வயதான கோலியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் உற்சாகமாக இருந்தார்.

Azharuddeen 1

விராட் கோலி தனக்கு டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ் அனுப்பியதை மகிழ்ச்சி பொங்க காண்பித்தார்அசாருதீன். “ஆர்சிபிக்கு வரவேற்கிறோம் ஆல் தி பெஸ்ட் – விராட் கோலி”. இவ்வாறு கோலியிடம் இருந்து மெஸ்ஸேஜ் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர் தனது கிரிக்கெட் ஐகான் என்றும் அவருடன் ஆட வேண்டும் என்று கனவு கண்டேன் தற்போது அவர் தலைமையின் கீழ் ஆடப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாகவும் , உற்சாகமாகவும் உள்ளது என்று மிகிழ்ச்சி பொங்க கூறினார்.

- Advertisement -

Azharuddeen 2

ஐபிஎல் போட்டியில் சேலஞ்சர்களுக்கு அதிக ரன் அடித்த வீரர்களான விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது குறித்தும் அசாருதீன் பேசினார். நான் ஆர்.சி.பிக்காக ஆடவே விரும்பினேன், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. டிரஸ்ஸங்க ரூமை கோஹ்லி பாய் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது ஒரு கனவு அனுபவமாக இருக்கும். இங்கு வர எனக்கு உதவிய அனைவருக்கும் நான் இந்த வேளையில் நன்றி கூறுகிறேன் என்றும் கூறினார்.