புதிய சூப்பர்ஸ்டார் சிராஜ்.. ஓயாம இந்தியாவை ஜெய்க்க வைக்க அந்த சாப்பாடு தான் காரணம்.. அசாருதீன் பாராட்டு

Mohammed Siraj
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.

அன்றைய நாளில் முகமது சிராஜ் அனலாக பவுலிங் செய்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அந்தத் தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களால் 5 போட்டிகளில் முழுமையாக விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களில் விதிவிலக்காக சிராஜ் மட்டும் 5 போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகள் (23) எடுத்த பவுலராக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஓயாமல் அசத்திய சிராஜ்:

இத்தனைக்கும் அத்தொடரில் 183 ஓவர்கள், 1113 பந்துகளை வீசி அவர் கடைசி நாளின் கடைசி பந்தை 143 கி.மீ வேகத்தில் வீசியது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் ஆகியோர் கடைசி பந்தை 143 கி.மீ வேகத்தில் வீசி இந்தியாவை வெற்றி பெற சிராஜை பார்த்து வியந்து பாராட்டினார்கள்.

இந்நிலையில் முகமது சிராஜ் ஓயாமல் பவுலிங் போட்டு இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்கு அவருடைய அசைவ சாப்பாடு உணவு முறையே காரணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். குறிப்பாக மட்டன் நல்லி எலும்பு பிரியாணியும் பாயாவையும் சாப்பிட்டு சிராஜ் தன்னுடைய கால்களை பலப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ் இந்திய கிரிக்கெட்டில் புதிய சூப்பர்ஸ்டார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அசாருதீன் பாராட்டு:

இது பற்றி அசாருதீன் மிட்-டே இணையத்தில் பேசியது பின்வருமாறு. “சிராஜ் அபாரமாக செயல்பட்டார். அதற்கு காரணமான நல்லி எலும்பு பிரியாணி மற்றும் பாயா உணவுகளுக்கு நன்றிகள். அவற்றை சாப்பிட்டு சிராஜ் தன்னுடைய உடலை முன்னேற்றியுள்ளார். குறிப்பாக அவர் தன்னுடைய கால்களை பலப்படுத்தியுள்ளார். தொடர் முழுவதும் சிறந்து விளங்குவதற்கான பசியைக் கொண்டிருந்த அவர் இந்தியாவுக்கு தேவையானதைப் பெற்றுக் கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: 5 போட்டிகள் 25 நாட்கள்.. இங்கிலாந்தை பாத்தாச்சும் பிசிசிஐ திருந்தி இதை செய்யனும்.. வெங்சர்கார் அட்வைஸ்

“அதிலும் ஓவல் மைதானத்தில் அவர் வீசிய கடைசி ஸ்பெல் அற்புதமானது. அவர் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத சமயத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு விளையாடினார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது கடினமாக சென்ற அவர் நிறைய தீவிரத்தன்மையுடன் பவுலிங் செய்தார். தற்போது அவர் இந்திய விளையாட்டில் ஒரு புதிய சூப்பர் ஸ்டாராக தெளிவாகத் தெரிகிறார்” என்று பாராட்டினார்.

Advertisement