இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அத்தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதிலும் கடைசிப் போட்டியில் இந்திய அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.
அதனால் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது. முன்னதாக அத்தொடரின் 5 போட்டிகளும் 5வது நாள் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. மொத்தம் 25 நாட்கள் நடைபெற்ற அந்தத் தொடரில் வெற்றி பெறுவதற்கு இரு அணி வீரர்களும் கடுமையாகப் போராடினார்கள்.
இங்கிலாந்தை பாத்து:
அதற்கு இங்கிலாந்து மைதானங்களில் தரமான பிட்ச் அமைக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்கார் பாராட்டியுள்ளார். மறுபுறம் இந்தியாவில் சமீப காலங்களாகவே பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களுக்குள் முடிந்து விடுகிறது. அதனால் இந்தியா சொந்த மண்ணில் வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைப்பதாக ஏற்கனவே விமர்சனம் இருந்து வருகிறது.
சொல்லப்போனால் அது போன்ற பிட்ச்கள் தான் கடந்த நியூஸிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற முக்கிய காரணமானது. எனவே இங்கிலாந்து வாரியத்தை பார்த்து பிசிசிஐ பிட்ச்களை தரமானதாக அமைக்க வேண்டும் என்று வெங்சர்கார் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பிசிசிஐ திருந்துமா:
“இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் கலாச்சாரத்தை நான் கண்டிப்பாக பாராட்டுவேன். அங்கே அனைத்துப் போட்டிகளுக்கும் நிறைய ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுத்தனர். நல்ல பிட்ச்கள் அனைத்து 5 போட்டிகளின் முடிவுகளும் 5வது நாளில் முடிவு செய்யப்படுவதை உறுதி செய்தன. அதனால் அந்தத் தொடர் காலத்திற்கும் மறக்க முடியாததாக அமைந்தது”
இதையும் படிங்க: என்னோட கோபத்தை குறைக்க தோனி என்னிடம் இதைத்தான் சொல்வார் – அம்பத்தி ராயுடு பகிர்வு
“அது டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் புத்துயிர் பெற வைத்தது. அது டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும் அதிகரித்துள்ளது. அது நல்ல பிட்ச்களை அமைத்தால் டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றப்படுவதுடன் மலரும் என்பதைக் காண்பித்துள்ளது. இந்தியாவும் தங்களது அடுத்த டெஸ்ட் தொடர்களில் நல்ல பிட்ச்களை அமைக்கும் என்று நம்புகிறேன். போட்டிகளை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதன் வாயிலாக கிடைக்கும் குறுகிய கால ஆதாயங்களைத் தேடும் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பிசிசிஐ ஆதரவளிக்கக் கூடாது” என்று கூறினார்.



